← முகப்பு செய்திகள்

மெட்ரோ ரயிலில் ஏப்ரலில் 90.18 லட்சம் பேர் பயணம்

🕐 04 May 2026 📂 செய்திகள் 30 பார்வைகள்
மெட்ரோ ரயிலில் ஏப்ரலில் 90.18 லட்சம் பேர் பயணம்

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 90.18 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் 2 வழித் தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், மெட்ரோ ரயில்களில் நடப்பாண்டில் ஏப்ரல் மாதத்தில் 90.18,069 பேர் பயணம் செய்துள்ளனர். இம்மாதத்தில் அதிகபட்சமாக. ஏப்.2ம் தேதி 3,65,807 பேர் பயணம் செய்துள்ளனர். சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 45.18,247 பேரும், பயண அட்டைகளை பயன்படுத்தி 25,659 பேரும், க்யுஆர் குறியீடு பயணச் சீட்டைப் பயன்படுத்தி 44,74,163 பேரும் பயணம் செய்துள்ளனர்.

டிஜிட்டல் எஸ்விபி, க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு, வாட்ஸ்- அப் மற்றும் சிங்கார சென்னை அட்டை பயணச் சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மெட்ரோ ரயில் நிலைய கவுன்ட்டர்களில் வாங்கப்படும் காகித க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு இந்த தள்ளுபடி கிடையாது என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net