← முகப்பு தலையங்கம்

முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றபோது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இரண்டாவதாகவே ஒலித்தது. முதல் பாடலாகத் தேசிய

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 58 பார்வைகள்
முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றபோது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இரண்டாவதாகவே ஒலித்தது. முதல் பாடலாகத் தேசிய
ஸ்டாலின் பதவியேற்ப்பில் இரண்டாவதாக ஒலித்த தமிழ்தாய் வாழ்த்து- எங்கே இருந்தார் திருமா ?

முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றபோது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இரண்டாவதாகவே ஒலித்தது. முதல் பாடலாகத் தேசிய கீதமும், அதன் பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. அப்பொழுது எங்கே இருந்தார் தொல். திருமாவளவன் என்று பிரபல ஆய்வாளர் பாண்டே கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது, அதாவது 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டமே இந்த ‘வந்தே மாதரம்’ பாடல் நடைமுறை ஆகும். ஆளுநர் எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட வேண்டும் என்பது அரசாணை. அது ஒரு சட்டம்.

எனவே, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையே தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்கள் பின்பற்றியுள்ளார். இதனால், அவரை விமர்சனம் செய்யத் தொல். திருமாவளவனுக்கு எந்த ஒரு அருகதையும் இல்லை என்று பாண்டே விளக்கியுள்ளார். இருப்பினும், திருமாவின் விமர்சனத்தை ஏற்றுக்கொண்ட ஆதவ் அர்ஜுனா, “இனி இப்படி நடக்காது என்றும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதல் இடம் கொடுப்போம்” என்றும் கூறியுள்ளார்.

பதவியேற்கும் முதல் நாளில் இருந்தே விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளது வி.சி.க (VCK) கட்சி. இவர்கள் எந்த நோக்கத்தில் விஜய்க்கு ஆதரவு கொடுத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. இவை அனைத்தும் தி.மு.க-வின் திட்டமா என்பதும் புரியவில்லை. ஆட்சியை இடையில் கலைக்கத் திருமா திட்டமிட்டுள்ளாரா என்ற சந்தேகங்களும் எழுகிறது. ஏனெனில், தி.மு.க-விடம் கேட்ட பின்னரே விஜய்க்கு ஆதரவு கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் திருமா.

மேலும், இரண்டு நாட்களாக மீனம்பாக்கம் விடுதியில் பூட்டிய அறையிலிருந்து எதனைப் பற்றி, யாருடன் விவாதித்தார் என்பதும் தெரியவில்லை. வி.சி.க கட்சியில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் விஜய்யுடன் சேரலாம் என்று பச்சைக்கொடி காட்டிய பின்னரும், திருமா எதற்காக இரண்டு நாட்களாக இழுத்தடித்தார் என்பது இன்றுவரை சிதம்பர ரகசியமாகவே உள்ளது. எனவே, விஜய் அவர்கள் அ.தி.மு.க-விலிருந்து வரும் சில சட்டமன்ற உறுப்பினர்களைத் தன் கைவசம் வைத்திருப்பதே பாதுகாப்பானது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசியல் ஆதாயத்த
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
சில மணி நேரங்களுக்கு முன்னர், ஈரான் வளை குடாவில் தரித்து நிற்க்கும் அமெரிக்க கப்பல் மீது
4 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
NEVER UNDER ESTIMATE ! தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய மற்றும்
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
கடந்த மே மாதம் 20ஆம் தேதியே மின்சார வாரியத்தில் இருந்து, ஹார்ட் டிஸ்க்குகள் (Hard-Discs) காணாமல்
7 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
இந்தியாவில் நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா (Rajya Sabha) உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் க
9 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ஸ்பெயின் நாட்டின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான டெனெரிஃப் (Tenerife) தீவில், நேற்று மாலை 5
10 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net