← முகப்பு செய்திகள்

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் நேற்றையதினம் வீதி விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 26 பார்வைகள்
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் நேற்றையதினம் வீதி விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
யாழ். மானிப்பாயில் வீதி விதிகளை மீறி செயற்பட்ட பொலிஸார்

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் நேற்றையதினம் வீதி விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நேற்றையதினம் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டியானது மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது மானிப்பாய் பொலிஸார் அங்கு கடமையில் இருந்துள்ளனர். இதன்போது பொலிஸார் தமது வாகனங்களை வீதி விதிமுறைகளை மீறி பாதசாரி கடவைக்கு அண்மையில் நிறுத்தியிருந்ததை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரண பொலிஸார் தமது முச்சக்கர வண்டியையும், வீதி போக்குவரத்து பொலிஸார் தமது மோட்டார் சைக்கிளையும் அங்கு நிறுத்தி வைத்திருந்துள்ளனர்.

அத்துடன் ஏற்கனவே அங்கு வேறு வாகனங்களும் தரிக்கப்பட்டு காணப்பட்டுள்ளன. அந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடவில்லை.

ஆனால் அதற்கு பின்னர் வந்த வாகனங்களை அங்கே நிறுத்த வேண்டாம் என்று கூறி மக்களுடன் முரண்பட்டு விட்டு தாங்கள் அங்கேயே தமது வாகனத்தை நிறுத்தி வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியானது போக்குவரத்து நெரிசலுடன் கூடிய சிறிய வீதி என்ற நிலையில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸாரே அதனை தட்டிக் கழிக்கும் வகையில் செயற்படுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் விசாரணை நடாத்தி இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் வழிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net