← முகப்பு செய்திகள்

மாதிவெல பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 44 பார்வைகள்
மாதிவெல பகுதியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

மாதிவெல பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 1 கிலோகிராம் 58 கிராம் ஹெரோயின் மற்றும் 3 கிலோகிராம் 34 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net