← முகப்பு செய்திகள்

மன்னார் மூர் வீதியில் கணவனைக் கொலை செய்து துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூட குழியில் போட்ட மனைவி!

🕐 05 May 2026 📂 செய்திகள் 22 பார்வைகள்
மன்னார் மூர் வீதியில் கணவனைக் கொலை செய்து துண்டு துண்டுகளாக வெட்டி மலசலகூட குழியில் போட்ட  மனைவி!

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில் போட்ட நிலையில் குறித்த சடலம் திங்கட்கிழமை (4) மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார் மூர்வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தர்க்கம் காரணமாக மனைவி தனது கணவனை தாக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை (3) துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசல கூட குழியினுள் போட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் சரணடைந்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதோடு மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கு தெரியப் படுத்தியதோடு கொலையை செய்த குறித்த பெண்ணையும் அழைத்து வந்தனர்.பின்னர் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்த நிலையில் சடலம் மலசலகூட குழியில் இருந்து எடுக்கப்பட்டது.

உயிரிழந்தவர் மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்தவர் 36 வயதுடையவர் என தெரிய வருகிறது.

குடும்பத் தகராறு முற்றிய நிலையில் மனைவியால் கணவன் கொலை செய்யப்பட்டு சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உறப்பையில் போட்டு வீட்டின் மலசலகூட குழிக்குள் வீசப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு,கொலை செய்த அவரது மனைவி மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் கடந்த இரண்டு மாதங்களாக மன்னார் மூர்வீதியில் எவ்வித பதிவுகளும் இன்றி வசித்து வந்துள்ளது தெரிய வருகிறது.

இந்த நிலையில் குறித்த வீட்டில் உள்ள உடமைகள் அனைத்தும் குறித்த பெண்ணை உரிமை கோரிய அவரின் தந்தையிடம் ஒப்படைக்க பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
5 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
5 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
5 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Rare Planetary Transit On 11 June 2026 After 100 Years: ஜூன் 11
2
உலக அரங்கில் எப்போதுமே கணிக்க முடியாத அதிரடி அரசியல் ஆட்டங்களை ஆட
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
3
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சம
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
4
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
5
காஸா மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
6
KS Bharat has officially retired from international cricket at th
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்
தமிழ் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net