← முகப்பு செய்திகள்

மதுவரி திருத்தமின்மையால் மதுப்பயன்பாடு அதிகரிப்பு

🕐 05 May 2026 📂 செய்திகள் 102 பார்வைகள்
மதுவரி திருத்தமின்மையால் மதுப்பயன்பாடு அதிகரிப்பு

இலங்கையில் மதுசார விலைகளில் முறையான விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமையினால், மக்கள் மத்தியில் மதுசாரத்தைக் கொள்வனவு செய்யும் வசதி அதிகரித்துள்ளதோடு, அதன் விளைவாக மதுப்பயன்பாடும் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் கவலை வெளியிட்டுள்ளது.

பணவீக்கம் மற்றும் தனிநபர் வருமான அதிகரிப்புக்கு ஏற்ப மதுசார வரி திருத்தப்படாமையே இந்த நிலைமைக்கு பிரதானக் காரணமாக அமைந்துள்ளதாகவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலத் தரவுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மதுசார உற்பத்தி பாரியளவில் அதிகரித்துள்ளதுடன், குறிப்பாக மதுசார வகைகளின் உற்பத்தி 17 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் மதுவரி 20 சதவீதத்தால் உயர்த்தப்பட்டபோது மது விற்பனை 8.3 மில்லியன் லீட்டர்களால் குறைந்த அதேவேளை, அரசாங்கத்தின் வருமானம் 11.6 பில்லியன் ரூபாவால் அதிகரித்திருந்தது. அதேபோல், 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் வரி அதிகரிக்கப்பட்டமையால் விற்பனை குறைந்த போதிலும், வரி வருமானம் 42.15 பில்லியன் ரூபாவாக உயர்ந்திருந்தது.

இதன்மூலம் வரி அதிகரிப்பு என்பது மதுப்பயன்பாட்டைக் குறைப்பதோடு அரசாங்க வருமானத்தை உயர்த்தும் ஒரு கருவியாகவும் உள்ளது. மதுசாரம் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானத்தை விட, மதுப்பயன்பாட்டினால் ஏற்படும் ஆரோக்கிய மற்றும் பொருளாதார பாதிப்புகளைச் சரிசெய்ய அரசாங்கம் செலவிடும் தொகை மிக அதிகமாக உள்ளமை கவலைக்குரிய விடயமாகும். புள்ளிவிபரங்களுக்கமைய, மதுவரி வருமானமாக 165.2 பில்லியன் ரூபா கிடைக்கும் நிலையில், அதன் பாதிப்புகளை நிவர்த்தி செய்ய 237 பில்லியன் ரூபா வரை செலவிட வேண்டியுள்ளது. எனவே, நாட்டின் பணவீக்கம் மற்றும் மக்களின் வருமான மாற்றங்களைக் கருத்திற்கொண்டு மதுசார வரியினை அரசாங்கம் அவ்வப்போது திருத்தியமைக்கப்படுவது அவசியம்.

மதுசார உற்பத்திகளுக்கான மறைமுக விலை குறைப்பு மற்றும் தள்ளுபடி வழங்கும் நடைமுறைகளைச் சட்டரீதியாகத் தடுப்பது அவசியம். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டல்களுக்கு அமைய, முறையான வரி மற்றும் விலைக் கொள்கையைப் பின்பற்றுவதன் மூலமே மதுப்பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, நாட்டின் பொருளாதார மற்றும் சுகாதார நிலையைப் பாதுகாக்க முடியும் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
6 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
6 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
7 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
7 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
7 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாத
தலையங்கம் · 42 நிமிடங்கள் முன்னர்
2
ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய ஜெட்
பதிவு · 1 மணி நேரம் முன்னர்
3
Rare Planetary Transit On 11 June 2026 After 100 Years: ஜூன் 11
இன்றைய ராசிபலன் · 1 மணி நேரம் முன்னர்
4
உலக அரங்கில் எப்போதுமே கணிக்க முடியாத அதிரடி அரசியல் ஆட்டங்களை ஆட
தலையங்கம் · 3 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சம
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
6
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
7
காஸா மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net