← முகப்பு செய்திகள்

மட்டு. எல்லையில் உள்ள ஆற்றின் பெயர் கூட தெரியாதவர், மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்து பேசுவது வேடிக்கையானது!

🕐 04 May 2026 📂 செய்திகள் 12 பார்வைகள்
மட்டு. எல்லையில் உள்ள ஆற்றின் பெயர் கூட தெரியாதவர், மாவட்டத்தின் அபிவிருத்தி குறித்து பேசுவது வேடிக்கையானது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் உள்ள ஆறு மல்வத்து ஓயாவா? மாதுரு ஓயாவா என தெரியாவதர்கள் எல்லாம் மட்டக்களப்பின் அபிவிருத்தியைப் பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி இளைஞர் முன்னேற்ற விளையாட்டுக் கழகத்தின் 44வது விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களிலே என்னால் சில அபிவிருத்தி பணிக்கள் இந்த மைதானத்திற்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும் இன்னும் சில அபிவிருத்தி பணிகள் நிருவாகத்தில் இருந்த குழப்பகரமான செயற்பாடுகளால் மிகவும் பல சிரமங்களுக்கு மத்தியில் செய்தும் முடிக்கப்பட்டது.

பின்னர் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக எமது நாட்டிலே தற்போது அபிவிருத்திப் பணிகள் என்பது பூச்சியமாகவே உள்ளது. கடந்த அரசாங்ககளில் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என பல்வேறுப்பட்ட அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவையனைத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பிற்கு வருகை தந்த அமைச்சரொருவர் மட்டக்களப்பில் ஏற்படும் வெள்ளம் தொடர்பாக பேசியிருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்திலே ஏற்படுகின்ற வெள்ளத்தினை தடுப்பதற்கான பல திட்ட வரைபுகள் கடந்த ஆண்டுகளில் பல வழங்கியிருக்கின்றோம்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களாகியும் இதுவரை வெள்ளத்தினை கட்டுப்படுத்துவதற்கான முன்னொழந்த எந்வொரு திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்ததாக இல்லை. இது இவ்வாறு இருக்க அமைச்சர் ஒருவர் ம்டக்களப்பின் எல்லையில் உள்ள மாதுரு ஓயாவா? மல்வத்து ஓயாவா என்று கூட தெரியாமல் மட்டக்கள்பபினை அபிவிருத்தி செய்யப்போவதாக கூறுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே எங்கெங்கு என்னென் அபிவிருத்தி செய்ய வேண்டும் என நாம் நன்கு அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் அவற்றுக்கு தேவையான நிதியினை அரசாங்கம் வழங்காமல் மக்களுக்கு ஆசை வார்த்தைகளை காட்டி தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றனர்.

அநுர குமார திசாநாயக்கவின் அரசினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என நாம் கூறவில்லை. மக்களுக்கு ஆசைவார்த்தைகளை கூறுவதை நிறுத்தி வைத்து விட்டு மக்களுக்கு தேவையான விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
04 Jun 2026
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
25 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
41 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
51 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
57 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net