← முகப்பு செய்திகள்

போர் பதற்றத்திற்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த இந்திய கப்பல்

🕐 04 May 2026 📂 செய்திகள் 88 பார்வைகள்
போர் பதற்றத்திற்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த இந்திய கப்பல்

மத்திய கிழக்கு போரில் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் அங்கு கப்பல் போக்குவரத்து முடங்கியது.இருந்தபோதிலும் இந்தியாவை நோக்கி புறப்பட்ட கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்தது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றிய சில கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்தன. இதற்கிடையே ஈரான் துறைமுகங்களை முடக்கும் வகையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் கடந்த ஏப்ரல் 13-ந்தேதி முதல் அமெரிக்க கடற்படை முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் அந்த ஜலசந்தியில் தனது கட்டுப்பாட்டை அதிகரித்து உள்ளது. இதில் 2 இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவை நோக்கி புறப்பட்ட கப்பல் ஒன்று பாதுகாப்பாக ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்து உள்ளது. மார்ஷல் தீவுகளின் கொடியை ஏந்திய எம்.டி. சர்வ சக்தி என்ற கப்பல் 46,313 மெட்ரிக் டன் எல்.பி.ஜியுடன் (திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. அந்த கப்பல் வெற்றிகரமாக ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்து உள்ளது. அது வருகிற 13-ந்தேதி விசாகப்பட்டினத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் ஈரானின் கடும் கட்டுப்பாடுகளுக்கு பிறகு ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்த முதல் இந்திய கப்பல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை, இந்திய கொடியை ஏந்திய 10 எரிசக்தி கப்பல்கள், 9 எல்.பி.ஜி. கப்பல்கள் மற்றும் ஒரு கச்சா எண்ணெய் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்துள்ளன.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
04 Jun 2026
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
04 Jun 2026
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
04 Jun 2026
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
4 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
10 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
16 நிமிடங்கள் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net