← முகப்பு செய்திகள்

போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியதா ஈரான்? அமெரிக்கா மறுப்பு

🕐 05 May 2026 📂 செய்திகள் 70 பார்வைகள்
போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியதா ஈரான்? அமெரிக்கா மறுப்பு

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் ஏராளமான சரக்கு கப்பல்கள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. கப்பல் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளதால், பல்வேறு நாடுகளுக்கான கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஈரானின் துறைமுகங்களை மற்றும் கடற்பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்காமல் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. ஈரானை வழிக்கு கொண்டு வந்து ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல்களை கொண்டு செல்வதற்காக பல்வேறு ராஜதந்திர மற்றும் கொள்கைரீதியான வழிமுறைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிசீலித்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவின் போர்க்கப்பலை ஈரான் தாக்கியதாக தகவல் வெளியானது. ஹார்முஸ் ஜலசந்திக்கு தென்கிழக்கே, கடல்சார் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதையடுத்து அந்தக் கப்பல் வந்த வழியே பின்வாங்கி சென்றதாகவும் ஈரானிய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. இதனால் மீண்டும் அப்பகுதியில் பதற்றம் உருவானது. ஆனால் இந்த தகவலை அமெரிக்க ராணுவம் மறுத்துள்ளது. பாரசீக வளைகுடாவிற்கு அருகிலுள்ள பகுதியில் அமெரிக்கா தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வதை வழிநடத்தவும், ஈரானின் அனுமதியை பெறாத கப்பல்கள் மீது அந்த நாடு விதித்துள்ள முற்றுகையை அகற்றவும் அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்க ராணுவத்தின் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. இது ஒருபுறமிருக்க தெற்கு லெபனான் முழுவதும் போர்நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. குனைன் மற்றும் பராச்சித் நகரங்கள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும், குனைன் மீது பீரங்கி தாக்குதல் நடத்தியதாகவும் அந்த செய்தியில் கூறி உள்ளது. துலைன், கஃபார் தெப்னிட், ஸவ்தார் அல்-கர்பியா ஆகிய நகரங்களையும், டெய்ர் சிரியான்-ஸவ்தாரின் புறநகர்ப் பகுதிகளை இஸ்ரேல் படைகள் குறிவைத்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
6 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
6 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
7 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
7 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
7 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாத
தலையங்கம் · 43 நிமிடங்கள் முன்னர்
2
ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய ஜெட்
பதிவு · 1 மணி நேரம் முன்னர்
3
Rare Planetary Transit On 11 June 2026 After 100 Years: ஜூன் 11
இன்றைய ராசிபலன் · 1 மணி நேரம் முன்னர்
4
உலக அரங்கில் எப்போதுமே கணிக்க முடியாத அதிரடி அரசியல் ஆட்டங்களை ஆட
தலையங்கம் · 3 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சம
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
6
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
7
காஸா மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net