← முகப்பு செய்திகள்

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி 4,441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

🕐 04 May 2026 📂 செய்திகள் 80 பார்வைகள்
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி 4,441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல்-அமைச்சராக, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பதவி வகித்து வருகிறார். 2021-ம் ஆண்டு மே மாதம் முதல், ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவர் பலமுறை முதல்-அமைச்சர் பதவியை வகித்திருக்கிறார். இதன்படி முதலில், 2001 முதல் 2008 ஆண்டு வரையிலும், பின்னர் 2011 முதல் 2016 வரையிலும் அவர் முதல்-மந்திரியாக இருந்திருக்கிறார். 2011-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இருந்து பிரிந்து, தனியாக அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியை அவர் உருவாக்கினார்.

ஜூன் 15-ந்தேதி உடன் அவருடைய ஆட்சியின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு கடந்த ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் சட்டசபை தேர்தல் பலத்த பாதுகாப்புடன், வன்முறை எதுவுமின்றி நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி தொடங்கி நடந்து வருகிறது.

இதில், புதுச்சேரியில் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முதல்-அமைச்சரான ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் 4,441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
04 Jun 2026
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net