← முகப்பு செய்திகள்

புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் கள விஜயம் முன்னெடுப்பு

🕐 4 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 74 பார்வைகள்
புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் கள விஜயம் முன்னெடுப்பு

புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு சொந்தமான காணியில் மணல் மற்றும் கிரவல் அகழ்வினை மேற்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக கள விஜயமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கள விஜயமானது நேற்றையதினம்(05.05.2026) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் பிரதேச சபைக்குட்பட்ட மக்களுக்கு மணல் மற்றும் கிரவலை ஆகியவற்றை நியாயமான மற்றும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வில் புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர் கி.டென்சியா, புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலன், கனியவள பொறுப்பதிகாரி, வனவள பாதுகாப்பு அதிகாரி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net