← முகப்பு தலையங்கம்

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதுடன், அவரை மருத்துவ பரிசோதனைக்காக ராகமை போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 80 பார்வைகள்
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதுடன், அவரை மருத்துவ பரிசோதனைக்காக ராகமை போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதுடன், அவரை மருத்துவ பரிசோதனைக்காக ராகமை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி அவரை துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளைத் தொடங்கிய இலங்கை – ராகமை பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதுடன், அவரை மருத்துவ பரிசோதனைக்காக ராகமை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ராகமை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பிரதான பெண் சந்தேகநபர் மற்றும் 20, 21, 22, 23 வயதுகளைக் கொண்ட ராஜாங்கனை, கடவத்தை, ராகமை மற்றும் திருகோணமலை சீனக்குடா பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று (18) வெலிசர நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடரப்படுகின்றன.

மேலும் செய்திகள்
தலையங்கம்
வீட்டில் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்குப் பேன் மற்றும் ஈறுத் தொல்லை பொதுவான பிரச்சினை. வேப்பிலை, படிகாரம்,
06 Jun 2026
தலையங்கம்
30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 8, 2026 அன்று சுக்கிரனும் சந்திரனும் இணைந்து உருவாக்கும் நவபஞ்சம
30 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின்
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்மாய் பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க 10-ஆம் வகுப்பு பள்ளி
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா (மாநிலங்களவை) இடைத்தேர்தலில், ஆளும் தவெக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்
3 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
பிரிட்டனின் கில்ட்ஃபோர்ட் (Guildford) பகுதியில் உள்ள சர்ரே பல்கலைக்கழகத்தின் (University of Surrey) வளாகத்தில்
8 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net