← முகப்பு செய்திகள்

பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு தடவை நான் விவசாயிகளின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எழுப்பும்போது, ஆளும் தர

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 28 பார்வைகள்
பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு தடவை நான் விவசாயிகளின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எழுப்பும்போது, ஆளும் தர
டை, கோட் அணிந்த ஆளும் தரப்பு அமைச்சர்களுக்கு விவசாயிகள் ஞாபகத்துக்கு வருவதில்லை – சஜித்

பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு தடவை நான் விவசாயிகளின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எழுப்பும்போது, ஆளும் தரப்பு அமைச்சர்களின் கூற்றுகளுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள், இரசாயன பசளைகள் முதல் தேவையான கருவிகள் வரை சகலதுமே குறைந்த விலையில் கிடைக்கின்றன, உற்பத்திப் பொருட்களுக்கும் நல்ல விலை கிடைக்கின்றது என்றவாறு விவசாய அமைச்சர் லால்கந்த அவர்களும், பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அவர்களும் தெரிவித்தனர்.

ஆனால், அவர்கள் கூறுவது போன்று களத்தில், நடைமுறையில் அவ்வாறு ஏதுமில்லை. தற்போது விவசாயிகளுக்கு உயர்தர விதைகளும் உரங்களும் கிடைத்தபாடில்லை.

உரங்களின் விலைகளும் அதிகரித்து காணப்படுகின்றன. இவை சரியான நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைத்தபாடுமில்லை. இரசாயன உரங்களும் தரமற்றே காணப்படுகின்றன.

இறுதியில் யானை- மனித மோதல் மற்றும் ஏனைய விலங்குகளின் சேதங்களுக்கு மத்தியில் அறுவடை செய்யும் வேளைகளில், விவசாயிக்கு இலாபம் ஈட்டிக்கொள்ளும் மட்டத்தில் விற்பனை விலைகள் அமைந்து காணப்படுவதுமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக மொனராகலை, புத்தல பிரதேசத்தில் இன்று (14) இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net