← முகப்பு பதிவு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஸ்

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 4 பார்வைகள்
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஸ்
சாலே விடுதலையா? 10ம் திகதி அறிவிப்பு!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஸ் சாலேவை வைத்திய பரிசீலனைக்கு உட்படுத்தி பிணையில் விடுதலை செய்வது குறித்த ஆணை இம்மாதம் 10ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

சுரேஸ் சலே சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு இன்று (04) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதனை தெரிவித்துள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஸ் சாலேவை மருத்துவ நிபுணர்கள் குழுவின் முன்பாக முன்னிலைப்படுத்தி அறிக்கை கோருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிடக் கோரி சட்டமா அதிபரால் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த ஆணை, எதிர்வரும் 10ஆம் திகதி(10.06.2026) அன்று அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஸ் சாலேவிற்கு உத்தரவிட்டதாக நம்பப்படும் கோத்தபாய மற்றும் சகபாடிகளான இரு இராணுவத்தளபதிகளை நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
பதிவு
லெபனானில் உள்ள ஐ.நா.வின் அமைதி காக்கும் பணிப் படையான யூனிஃபில் (UNIFIL) வீரர் ஒருவர் ,
5 மணி நேரம் முன்னர்
பதிவு
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத
22 மணி நேரம் முன்னர்
பதிவு
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின.குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏ
22 மணி நேரம் முன்னர்
பதிவு
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று, தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது வி
22 மணி நேரம் முன்னர்
பதிவு
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை
23 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து
1 நாள்கள் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net