இரத்தினபுரி – காவத்தை நீலகாமம் தோட்டத்தில் நபரொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மலையக சிவில் சமூக அமைப்புக்களால் இன்று திங்கட்கிழமை (4) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் மகஜரொன்று கையளிக்கப்படவுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை (5) கொழும்பு – ஐந்துலாம்பு சந்தியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதோடு, ஜனாதிபதி செயலகத்திலும் மகஜரொன்றை கையளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.