நிலக்கரி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழு மற்றும் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பி ரில்வின் சில்வாவை உடனடியாகக் கைது செய்து சட்டத்தை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி புதிய மக்கள் முன்னணியால் நிலக்கரி தொடர்பான முழு அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவில் இன்று (14) வியாழக்கிழமை முறைப்பாடொன்று கையளிக்கப்பட்டது.
கொழும்பு 12, நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள நிலக்கரி தொடர்பான முழு அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் தலைவரிடம் புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டாரவினால் இம்முறைப்பாட்டு மகஜர் கையளிக்கப்பட்டது.
ஆணைக்குழுவில் இந்த முறைப்பாட்டை புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டாரவுடன், கட்சியின் கொழும்பு மாவட்ட செயலாளர் விகும் கித்சிறி, ஹோமாகம தொகுதி அமைப்பாளர் நிஷோன் இந்திக, பொரள்ளை தொகுதி அமைப்பாளர் குஷான் மதநாயக்க மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர் ரொமேஷ் சாலிந்த ஆகியோர் கையளித்துள்ளனர்.