← முகப்பு தமிழ்

நாட்டில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இலங்கையில் பதிவ

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 54 பார்வைகள்

இலங்கையில் பதிவாகும் மரணங்களில் சுமார் 34 சதவீதமானவை உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் நோய்களாலேயே நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அலகப்பெரும நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர் ஸ்ரீனி அலகப்பெரும,

"உயர் இரத்த அழுத்தம் இருப்பது பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால், குறைந்தது ஆறு மாதங்களுக்கு அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதன் மூலம், அது அதிகரித்துள்ளதா என்பதை எம்மால் கண்டறிய முடியும். இலங்கையில் பொதுவாக நாட்டில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது. இதில் 63.9 சதவீதமானோர் சிகிச்சை பெறுவதில்லை. மேலும், சிகிச்சை பெறுபவர்களில் 39.1 சதவீதமானோரின் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லை. அதிக உப்புள்ள உணவுகளை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும்" என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
04 Jun 2026
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
9 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net