← முகப்பு செய்திகள்

நாட்டில் நிலவி வரும் மழையுடனான வானிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 16 பார்வைகள்
நாட்டில் நிலவி வரும் மழையுடனான வானிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை
11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவி வரும் மழையுடனான வானிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கையானது நாளை (15) காலை 9.00 மணிவரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி காலி, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்கள் இரு கட்டங்களாக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி,

காலி மாவட்டம்: நெலுவ பிரதேச செயலகப் பிரிவு.

களுத்துறை மாவட்டம்: ஹொரணை, அகலவத்தை, பதுரலிய, வலல்லாவிட்ட மற்றும் மத்துகம பிரதேச செயலகப் பிரிவுகள்.

இரத்தினபுரி மாவட்டம்: பெல்மடுல்ல பிரதேச செயலகப் பிரிவு.

அதேபோல், பின்வரும் மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

பதுளை மாவட்டம்: பண்டாரவளை, ஹாலி-எல மற்றும் பசறை பிரதேச செயலகப் பிரிவுகள்.

காலி மாவட்டம்: நியகம, தவலம மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவுகள்.

களுத்துறை மாவட்டம்: புலத்சிங்கள மற்றும் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவுகள்.

கண்டி மாவட்டம்: தும்பனை, பஸ்பாகே, தொலுவ, யட்டிநுவர, உடபலாத, கங்க இஹல கோரளை, அக்குரணை, ஹாரிஸ்பத்துவ, உடுநுவர, புஜாபிட்டிய, கங்கவட்ட கோரளை, பாதஹேவாஹெட்ட, ஹத்தரலியத்த, தெல்தொட்ட மற்றும் பன்வில பிரதேச செயலகப் பிரிவுகள்.

கேகாலை மாவட்டம்: அரநாயக்க, மாவனெல்லை, புலத்கொஹுபிட்டிய, ரம்புக்கனை, கேகாலை, யட்டியாந்தோட்டை மற்றும் வரகாபொல பிரதேச செயலகப் பிரிவுகள்.

குருநாகல் மாவட்டம்: ரிதிகம பிரதேச செயலகப் பிரிவு.

மாத்தளை மாவட்டம்: நாவுல, அம்பன்கங்கை கோரளை மற்றும் ரத்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகள்.

மேலும் செய்திகள்
செய்திகள்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் ஒன்றியம், நகரம் என
06 Jun 2026
செய்திகள்
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். இதே போல பாஜக நிர்வாகிகளும் அக்கட்சியிலிருந்த
06 Jun 2026
செய்திகள்
IND vs AFG Test Day 1: Shubman Gill and KL Rahul smash
06 Jun 2026
செய்திகள்
IND vs AFG Test: KL Rahul sparks internet debates after using calm
06 Jun 2026
செய்திகள்
திமுகவின் பொதுச் செயலாளராக உள்ள துரைமுருகன், தனது பதவியை துறக்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்
06 Jun 2026
செய்திகள்
இந்திய பெண்ணுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் ரவி மோகனின்
06 Jun 2026
முக்கிய செய்திகள்
1
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய எடுத்த முடிவு குறித்து தான் கவல
தமிழ் · 06 Jun 2026
2
“இதைப் பதிவு செய்து உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். 2029 இல் நாமல
தமிழ் · 06 Jun 2026
3
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள
4
Weekly Horoscope: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதி முதல் 2026 ஜூன் 13
5
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள்.
6
முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) இயக்குநரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜ
தமிழ் · 06 Jun 2026
7
புதிதாக உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளால் எந்த மாற்றமும் ஏற்பட
தமிழ் · 06 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net