← முகப்பு செய்திகள்

தீர்ப்பு வழங்கக்கூடிய வழக்கு விசாரணைகளின் இலக்கங்களை பகிரங்க மேடையில் தெரிவித்து, நாட்டின் நீதிமன்ற சுயாதீனத்த

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 32 பார்வைகள்
தீர்ப்பு வழங்கக்கூடிய வழக்கு விசாரணைகளின் இலக்கங்களை பகிரங்க மேடையில் தெரிவித்து, நாட்டின் நீதிமன்ற சுயாதீனத்த
நீதிமன்ற சுயாதீனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது – தயாசிறி ஜயசேகர

தீர்ப்பு வழங்கக்கூடிய வழக்கு விசாரணைகளின் இலக்கங்களை பகிரங்க மேடையில் தெரிவித்து, நாட்டின் நீதிமன்ற சுயாதீனத்துக்கு பாரிய அழுத்தத்தை நீதி அமைச்சர் மேற்கொண்டிருக்கிறார். அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி செவ்வாய்க்கிழமை (12) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் பிரதானியான ஜனாதிபதி வழக்கு தீர்ப்பு தொடர்பில் நீதிமன்ற சுயாதீனத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளதுபோன்று, நீதி அமைச்சரும் மேதின கூட்டத்தில் வழக்கு தீர்ப்பு வழங்க இருக்கும் வழக்குகள் தொடர்பாகவும் வழக்கு இலக்கத்துடன் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இந்த நாட்டின் நீதி அமைச்சர் ஒருவர் இவ்வாறு தீர்ப்பு வழங்க இருக்கும் வழக்குகள் தொடர்பில் பகிரங்கமாக தெரிவித்திருப்பது இதுவே முதல்தடவையாகும். அவ்வாறு தெரிவிப்பதற்கு அவருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. நீதி அமைச்சரும் நாட்டின் நீதிமன்ற சுயாதீனத்துக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார். அவருக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதிலும் பாரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் 5 நீதியரசர்களுக்கான பதவி வெற்றிடமாகி இருக்கிறது. 6 மாதங்களுக்கும் அதிக காலமாக இந்த வெற்றிடம் காணப்படுகிறது. இதுவரை அந்த வெற்றிடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்காமல் இருக்கிறது.அதேபோன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் 3 நீதிபதிகளுக்கான வெற்றிடம் காணப்படுகிறது.

இந்த வெற்றிடங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பது, மே 25 வழக்கு தீர்ப்புக்கு பின்னர் என்றால்.அல்லது நீதி அமைச்சர் தெரிவித்த வழக்கு தீர்ப்புகளுக்கு பின்னர் என்றால் தெளிவாகவே நீதிமன்றங்களின் சுயாதீனத்துக்கு அழுத்தம் இருக்கிறது. அதனால் நாட்டின் நீதிமன்ற நீதிபதிகளின் சுயாதீனத்தில் கை வைக்க வேண்டாம் என நாங்கள் தெரிவிக்கிறோம். அதேநேரம் நீதிபதிகள் சுயாதீனமாக செயற்பட முடியுமான சூழலை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். அது தற்போது ஏற்படுத்தப்படாமல் இருக்கிறது.

மேலும் கபில சந்திரசேனவிடம் வாக்குமூலம் பெரும்போது, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தனக்கு அழுத்தம் கொத்ததாக அவர் வாக்குமூலம் வழங்கி இருக்கிறார். இவ்வாறு அவர் 55 நாட்கள் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்த முதலாவது சந்தர்ப்பத்திலே அரசாங்கத்தின் அறிவிப்பின் பிரகாரம் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் மரணிப்பதற்கு காரணமாக அவர் இறுதியாக தெரிவித்த அறிவிப்பை, இறுதி அறிவிப்பாக அல்லது மரண வாக்குமூலமாக கருதலாம்.

அதன் பிரகாரம் கபில சந்திரசேனவுக்கு அழுத்தம் பிரயோகித்த லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் உள்ளிட்ட எவருக்கு எதிராகவும் யாருக்கு வேண்டுமானால் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடுக்க முடியும்.

அத்துடன் நாட்டில் 40க்கும் அதிகமான நீதிபதிகள் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை வரலாற்றில் இவ்வாறானதொரு நிலைமை ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அதனால் நாட்டின் நீதிபதிகளின் சுயாதீனத்தை பாதுகாக்க எந்த நடவடிக்கை எடுப்பதற்கும் நாங்கள் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறோம் என்றார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net