← முகப்பு செய்திகள்

திருமுறிகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கைத்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 32 பார்வைகள்
திருமுறிகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கைத்
திருமுறிகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும்

திருமுறிகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார். ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை (14) இடம்பெற்றது.

இதன்போது கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் திருமுறுகண்டி கோவிலுக்கு கிடைக்கின்ற வருமானங்கள் அனைத்தும் தற்போது பெளத்தசாசன அமைச்சிற்கே செல்கின்றது. குறித்த ஆலயமானது நீதிமன்ற வழக்கில் உள்ள ஓர் ஆலயமாகும். வருடாந்தம் பல மில்லியன் ரூபாய்கள் இவ்வாலயத்திற்கு வருமானமாக கிடைக்கின்றது.

அவ்வாறு கிடைக்கப்பெறும் வருமானங்கள் பெளத்தசாசன அமைச்சிற்கு செல்வதுடன் அவை மீண்டும் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு கூட திரும்பி வருவதில்லை. குறித்த ஆலயத்தின் மூலம் வருமானமாக பெறப்பட்ட பணமானது வெவ்வேறு தேவைகளுக்காக வடக்கு மாகாணத்திற்கு வெளியே பயன்படுத்தப்படும் நிலை காணப்படுகின்றது.

அவ்வாறில்லாமல், குறித்த ஆலயத்தின் மூலம் வருமானமாக பெறப்படுகின்ற பணமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகள் மிகவும் வருமானம் குறைந்த சபைகளாகும்.

அவற்றின் அபிவிருத்திசார் செயற்பாடுகளுக்கு இப்பணம் பயன்படுத்தப்படவேண்டும். மேலும் மாவட்டத்தில் வேறு அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளுக்கும் அதனை பயன்படுத்தலாம். அதனை இந்த சபை இன்று தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.

அத்துடன் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கான தனிப்பிரதேசசபையினை அமைக்க வேண்டும் என பலரும் கடந்த காலங்களில் பேசியிருந்தனர். இது தொடர்பில் பாராளுமன்றத்தின் விசேட உரையொன்றின் மூலம் நான் குறித்த கோரிக்கையினை அரசாங்கத்திற்கு முன்வைத்திருந்தேன்.

இந்த பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் இப்பகுதியை சேர்ந்தவர் எனும் வகையில் குறித்த விடயத்தை இன்றைய கூட்டத்தின் தீர்மானமாக நிறைவேற்றி அவருக்கு முன்னிலைப்படுத்துவதுடன் அரசாங்கத்திற்கும் அனுப்பிவைப்போம். இது தொடர்பில் விசேட கரிசனையெடுத்து செயற்படுமாறு தலைவரை கேட்டுக்கொள்கின்றேன்.

அத்தோடு அண்மையில் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த கலந்துகொண்ட வன்னி மாவட்டத்திற்கான கூட்டமொன்றில் அவரால் தெரிவிக்கப்பட்டதற்கமைவாக, அரச திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அல்லது தனியாருக்கு சொந்தமான காணிகளுக்கு அதற்குரிய ஏதேனும் ஆவனங்கள் இருப்பின் அவற்றை கிராம சேவையாளர் ஊடாக பிரதேச செயலாளருக்கு வழங்கி அவற்றின் தொகுப்பினை மாவட்ட அபிவிருத்திக்குழுவிற்கு காணி விடுவிப்புக்கான முன்மொழிவாக வழங்கவேண்டும் எனும் தீர்மானத்தினையும் இக்கூட்டத்தில் முன்மொழிகின்றேன் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் ஒன்றியம், நகரம் என
06 Jun 2026
செய்திகள்
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். இதே போல பாஜக நிர்வாகிகளும் அக்கட்சியிலிருந்த
06 Jun 2026
செய்திகள்
IND vs AFG Test Day 1: Shubman Gill and KL Rahul smash
06 Jun 2026
செய்திகள்
IND vs AFG Test: KL Rahul sparks internet debates after using calm
06 Jun 2026
செய்திகள்
திமுகவின் பொதுச் செயலாளராக உள்ள துரைமுருகன், தனது பதவியை துறக்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்
06 Jun 2026
செய்திகள்
இந்திய பெண்ணுக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் ரவி மோகனின்
06 Jun 2026
முக்கிய செய்திகள்
1
அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்ய எடுத்த முடிவு குறித்து தான் கவல
தமிழ் · 06 Jun 2026
2
“இதைப் பதிவு செய்து உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள். 2029 இல் நாமல
தமிழ் · 06 Jun 2026
3
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள
4
Weekly Horoscope: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதி முதல் 2026 ஜூன் 13
5
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள்.
6
முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) இயக்குநரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜ
தமிழ் · 06 Jun 2026
7
புதிதாக உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளால் எந்த மாற்றமும் ஏற்பட
தமிழ் · 06 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net