← முகப்பு செய்திகள்

திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த கைதி – சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் கைது

🕐 05 May 2026 📂 செய்திகள் 94 பார்வைகள்
திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த கைதி – சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் கைது

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார்.

உயிரிழந்த கைதி கடந்த 3ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையின் துப்புரவுப் பணிகளின் போது தப்பிச் சென்றிருந்ததுடன், அதன் போது சிறைச்சாலை அதிகாரிகளால் மீண்டும் பொறுப்பேற்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் குறித்த கைதி திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எவ்வாறாயினும், சிறைச்சாலை அதிகாரிகள் அவரைக் தாக்கியுள்ளதாக உயிரிழந்த கைதியின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதற்கமைய, இச்சம்பவம் தொடர்பில் வெலிக்கடை சிறைச்சாலையின் மூன்று சிறைக்காவலர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
5 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
5 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
5 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Rare Planetary Transit On 11 June 2026 After 100 Years: ஜூன் 11
2
உலக அரங்கில் எப்போதுமே கணிக்க முடியாத அதிரடி அரசியல் ஆட்டங்களை ஆட
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
3
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சம
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
4
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
5
காஸா மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
6
KS Bharat has officially retired from international cricket at th
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்
தமிழ் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net