← முகப்பு செய்திகள்

தவெக அமைச்சரவையில் விசிக எம்எல்ஏ வன்னியரசு பங்கேற்பார் என திருமா வளவன் அறிவித்துள்ளார். தவெக அமைச்சரவையில்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 20 பார்வைகள்
தவெக அமைச்சரவையில் விசிக எம்எல்ஏ வன்னியரசு பங்கேற்பார் என திருமா வளவன் அறிவித்துள்ளார். தவெக அமைச்சரவையில்
வன்னியரசு அமைச்சராகிறார்: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு

தவெக அமைச்சரவையில் விசிக எம்எல்ஏ வன்னியரசு பங்கேற்பார் என திருமா வளவன் அறிவித்துள்ளார். தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மேலும், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என முதல்வர் விஜய் சார்பில் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அமைச்சரவையில் பங்கேற்கும் என அறிவித்தது.

எனினும், விசிக அமைச்சரவையில் இடம்பெறுமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையே, விசிக தலைவர் திருமாவளவன் அமைச்சரவையில் இடம் பெறப் போகிறார் என விசிக வட்டாரங்களில் தீவிரமாகப் பேசப்பட்டது.

ஆனால், அமைச்சர் பதவி தொடர்பான முடிவு குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

இதற்கிடையே, தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய முக்கிய துறைகள் இடம்பெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விசிக சார்பில் திண்டிவனம் எம்எல்ஏ வன்னியரசு அமைச்சராக பதவியேற் பார் என திருமாவளவன் அறிவித்துள்ளார். இப்போது அமைச்சரவையில் இடம்பெறும் அறிவிப்பை மட்டும் தெரிவிக்கிறோம்.

திமுக கூட்டணியில் தொடர்வது உள்ளிட்டவை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் ஒரிருநாட்களில் இது குறித்து அறிவிப்போம் என திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
IND vs AFG Test: Afghanistan head coach Richard Pybus admits that
2
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடமையாற்றிய வனவளத் திணைக்கள அதிகாரி
3
செலவுகள் அதிகரித்தமை மற்றும் கட்டணத் திருத்தங்கள் தாமதமானமை காரணம
4
சுக்கிரன் கடக ராசிக்கு பெயர்ச்சி செய்வதால் குருவுடன் இணைந்து கஜலட
5
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 08 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
6
இஸ்ரேல் மீது இரான் திடீரென ஏவுகணைகளை வீசி தாக்குதல் – இஸ்ரே
செய்திகள் · 59 நிமிடங்கள் முன்னர்
7
தமிழக அரசியல் களத்தில் அண்மைக் காலமாகவே மிகப்பெரிய அலையை ஏற்படுத்
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net