← முகப்பு செய்திகள்

“தமிழ் தேசியகட்சிகள் ஒன்றுபட வேண்டிய தருணம்” என்பதை மனசாட்சிக்கு விரோதமின்றி உணர்ந்து சொல்லுங்கள் அத்துன் செயற்படுங்கள்”

🕐 05 May 2026 📂 செய்திகள் 84 பார்வைகள்
“தமிழ் தேசியகட்சிகள் ஒன்றுபட வேண்டிய தருணம்” என்பதை மனசாட்சிக்கு விரோதமின்றி உணர்ந்து  சொல்லுங்கள் அத்துன் செயற்படுங்கள்”

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நல்லையா குமரகுருபரன் அழைப்பு

“தமிழ் தேசியகட்சிகள் ஒன்றுபட வேண்டிய தருணம்” என்பதை மனசாட்சிக்கு விரோதமின்றி உணர்ந்து சொல்லுங்கள் ஒருமைப்படுங்கள் . .அதனை விசுவாசமாக உணர்ந்து அரசியல் தீர்வு விடயத்தில் ஒருமைப்படுங்கள். படிப்பது புராணம் இடிப்பது சிவன் கோவிலாக அமையக்கூடாது உங்கள் பிரிவினை தான் நீங்கள் கூறுவது போல் தென்னிலங்கை கட்சிகள் வடக்கு கிழக்கை தொட இடமளித்தது தமிழ் மக்களை வாக்களிக்கவைத்தது என்பதை புரியாது பேசுவது சிறுபிள்ளைத்தனமானது. கட்சிகளின் தனித்துவ வெற்றிக்காக பிரிந்து நின்றதினால் தான் ஒட்டுமொத்த பெரும்பான்மை ஆசனங்களை வடக்கு கிழக்கில் இழக்க நீங்களே காரணமானீர்கள்.என தமிழ் தேசியபணி சபையின் தலைவர் ,ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார் .

அரசியல் தீர்வு விடயத்தில், தயவு செய்து தமிழ் தேசிய கட்சிகள் வார்த்தைகளோடு வாதிடாமல் அடையக்கூடிய அரசியல் அதிகார பரவல் விடயங்களை செறிவு படுத்தப்படுத்துவதில் அதனை ஒருமைப்படுத்தி ஏகமனதாக ஏற்றுக் கொள்வதில் அக்கறை கொள்ளுங்கள்.”ஒற்றையாட்சி”, “சமஷ்ட்டி” , “கூட்டாட்ச்சி”எனும் சொல்லாடல்களுக்கப்பால் அடையக்கூடிய அதிகாரங்கள் மீது அக்கறை செலுத்துங்கள்.

தமிழர்தம் நியாயமான அபிலாசையில் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை ஆனால் அரசு அல்லது தென் இலங்கையுடனான பேச்சுவார்த்தைகளின் ஊடக அடையக்கூடிய இனப்பிரச்சினைக்கான தீர்வு காணும் வடிவத்தில் ஒரு புள்ளியில் ஒன்று பட்டாக வேண்டும் அது தமிழினத்திற்கு செய்யும் தார்மிக கடமையாகும் .

தமிழர்தம் நியாயமான அபிலாசை அது எட்டாக்கனியாகவே அமையும் இதுவரை இடம்பெற்ற ஆயுதப்போராட்டத்தை விட அல்லது சாஜெவே செல்வநாயகம் அவர்கள் தமிழரசு கட்சியூடாக செய்த அஹிம்சை போராட்டத்தைவிட ஏதும்வழிமுறை காணும் நிலையில் வழிமுறைவடிவம் கொடுத்து அபிலாசைகளை அடையவல்ல அரசியல் சக்தி இனியென்றும் நிதர்சனமில்லை என்பது வெள்ளிடை மலை என்பதைப் புரிந்துகொள்ள தவறக்கூடாது .

எனவே தென் இலங்கையுடனான பேச்சுவார்த்தைகளின் ஊடக அடையக்கூடிய இனப்பிரச்சினைக்கான தீர்வு காணும் வடிவத்தில் ஒருபுள்ளியில் ஒன்றுபட்டாகவேண்டும்.

சமஷ்டி முறைமை வலுவாக கடைப்பிடிக்கும் நாடுகளில் எங்கேனும் ஒருமாகாண அலகு தனி நாடாக பிரிந்ததாக ஒரு விடயம் உலகில் எங்கணும் ஏற்றப்படவில்லை என்பதை தென்னிலங்கை அரசியல் வல்லார் புரிந்துகொண்டால் சமஷ்டி எனும் கோரிக்கையின் நியாயப்பாடு அவர்களுக்கு புரியும் . ஆயினும் அப்படி ஒரு அரசியல் தீர்வின் தலைப்பிற்கான இறுதி அரசியல் சட்டவாக்கத்திற்கான செயற்ப்பாடு எதிர்கால தேர்தலில் அவர்தம் அரசியலில் இதையே காரணம்காட்டி தோல்வியுற்றிட வைத்திடுவார்கள் எனும் பயப்பீதியினால் ஆட்சியில் உள்ள எந்தஒரு தென்னிலங்கை கட்சியும் எந்த பேச்சுவார்த்தையிலும் ” சமஷ்டி” எனும் வார்த்தையுடன் இறுதித்தீர்வுக்கு உடன்பட போவதில்லை என எதிர்வு கூறலாம்,. ஆதலின் தமிழர்தம் முழுமையான அடிப்படை அபிலாசைகளிலிருந்து உள்ளடக்கப்பட வேண்டிய அதிகூடுதல் அதிகாரபரவலாக்கல்பற்றிய ஏகமானதான தமிழ் கட்சிகளின் ஒருமைப்பாடு காணப்படவேண்டும் ஆதலின் சுயநலன்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு தொடர் பேச்சுவார்த்தைகளில் தமிழ் தேசியகட்சிகள் ஒன்றுபட வேண்டிய தக்க தருணம் இது.

சமகால நம் தமிழர் அரசியல் பேசும் பலரைவிட அமரர் என் தலைவர் குமார் பொன்னம்பலம் காலத்தில் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன ,ஜனாதிபதி பிரேமதாச கால சர்வகட்சி சந்திப்புகள், சர்வகட்சி மாநாடுகள் பின்னர் ராஜபக்ச காலத்து பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதிகள்குழு முழுமையான இறுதி தீர்மானம்வரை ஜ ம மு சார்பில் அதன் பொதுச்செயலாளராக பங்குபற்றியவன் அந்தவகையில் எமது பிரித்தானிய விஜயத்தின்போது லண்டன் யூனிவர்சிட்டி கல்லூரியின் அரசியல் பீடாதிபதியின் சமஷ்டியென்ற வார்த்தையே அற்ற ஐக்கியராச்சி யத்தின் இங்கிலாந்து, அயர்லாந்து, வேல்ஸ்,என்பவற்றின் சமசீரற்ற “Devolution as per Demand ” எனும் வகையிலானஅரசியல் பரவலாக்கம் எனும் எமக்கான அரசியல் விளக்கவுரையை கலந்து புரிந்து கொண்டவன் எனும் அனுபவம் எனக்கு ஒரு பக்கம் உண்டு.

ஆதலின் தமிழர்தம் முழுமையான அடிப்படை அபிலாசைகளிலிருந்து உள்ளடக்கப்பட வேண்டிய அதிகூடுதல் அதிகாரபரவலாக்கல் பற்றிய ஏகமானதான தமிழ் கட்சிகளின் ஒருமைப்பாடு காணப்படவேண்டும் ஆதலின் சுயநலன்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு தொடர் பேச்சுவார்த்தைகளில் தமிழ் தேசியகட்சிகள் ஒன்றுபட வேண்டிய தக்க தருணம் இது என முன்னாள் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் பொதுச்செயலாளரும் ,தமிழ் தேசிய பணி சபையின் தலைவரும் ஜனநாயக மக்கள காங்கிரஸ் பிரதி தலைவருமான குமரகுருபரன் தெரிவித்துள்ளார் .

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
6 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
6 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
7 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
7 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
7 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாத
தலையங்கம் · 42 நிமிடங்கள் முன்னர்
2
ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய ஜெட்
பதிவு · 1 மணி நேரம் முன்னர்
3
Rare Planetary Transit On 11 June 2026 After 100 Years: ஜூன் 11
இன்றைய ராசிபலன் · 1 மணி நேரம் முன்னர்
4
உலக அரங்கில் எப்போதுமே கணிக்க முடியாத அதிரடி அரசியல் ஆட்டங்களை ஆட
தலையங்கம் · 3 மணி நேரம் முன்னர்
5
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சம
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
6
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
7
காஸா மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net