← முகப்பு தலையங்கம்

தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விஜய் ஆட்சியமைக்க

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 20 பார்வைகள்
தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விஜய் ஆட்சியமைக்க

தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றி கழகம் சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கட்சித் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது.

ஒரு நபர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், ஏதேனும் ஒரு தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை இருப்பதால், பின்னர் தவெக உறுப்பினர்கள் எண்ணிக்கை 107 ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் ஆட்சியமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு(2), மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (2), விடுதலை சிறுத்தைகள் (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் மொத்த ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தவெக தலைவர் விஜய் தமிழக பொறுப்பு ஆளுநர் Rajendra Arlekar அவர்களை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பெரும்பான்மை ஆதரவு கடிதங்களும் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

அதன்படி, நேரு உள்விளையாட்டு மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாகவும், விஜயுடன் சில முக்கிய தலைவர்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்
தலையங்கம்
யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசியல் ஆதாயத்த
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
சில மணி நேரங்களுக்கு முன்னர், ஈரான் வளை குடாவில் தரித்து நிற்க்கும் அமெரிக்க கப்பல் மீது
3 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
NEVER UNDER ESTIMATE ! தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய மற்றும்
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
கடந்த மே மாதம் 20ஆம் தேதியே மின்சார வாரியத்தில் இருந்து, ஹார்ட் டிஸ்க்குகள் (Hard-Discs) காணாமல்
6 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
இந்தியாவில் நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபா (Rajya Sabha) உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் சலுகைகள் க
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ஸ்பெயின் நாட்டின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான டெனெரிஃப் (Tenerife) தீவில், நேற்று மாலை 5
9 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net