← முகப்பு செய்திகள்

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட முதல

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 44 பார்வைகள்
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட முதல
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், 2 தொகுதியிலும் வெற்றி பெற்றார். ஆனால், 2 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.வாக அவர் தொடர முடியாது என்பதால், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ந்தேதி முதல், திருச்சி கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்துள்ளது. பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடத்தியாக வேண்டும். அந்த வகையில், நவம்பர் மாதத்திற்குள் திருச்சி கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தோல்வியை தழுவி இருந்தார். எனவே, அவரே மீண்டும் களம் காண்பாரா, அல்லது கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினே களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே நேரத்தில், த.வெ.க. தரப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்
செய்திகள்
Suryakumar Yadav axing from captaincy is tough decision taken for Team Future
06 Jun 2026
செய்திகள்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் ஒன்றியம், நகரம் என
06 Jun 2026
செய்திகள்
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். இதே போல பாஜக நிர்வாகிகளும் அக்கட்சியிலிருந்த
24 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test Day 1: Shubman Gill and KL Rahul smash
50 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: KL Rahul sparks internet debates after using calm
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
திமுகவின் பொதுச் செயலாளராக உள்ள துரைமுருகன், தனது பதவியை துறக்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net