← முகப்பு தமிழ்

ட்ரம்பின் உலகளாவிய வரி விதிப்பு நியாயமற்றவை என தீர்ப்பு

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 16 பார்வைகள்

இதனால் அமெரிக்க ஜனாதிபதியின் இறக்குமதி வரி உத்திக்கு அமெரிக்க மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1970-களின் வர்த்தகச் சட்டத்தின் கீழ், அவர் அண்மையில் விதித்த 10% தற்காலிக உலகளாவிய வரிகள் நியாயமற்றவை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எனினும் இதன் பலன் இரண்டு தனியார் இறக்குமதியாளர்களுக்கும் மற்றும் வொஷிங்டன் மாகாணத்திற்கும் மட்டுமே பொருந்தும் என நீதிமன்றம் தடுத்துள்ளது.

அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் 2-1 என்ற அடிப்படையிலான இந்தத் தீர்ப்பு, ட்ரம்ப் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு நடவடிக்கைகள் முடியும் வரை மற்ற அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் இந்தத் தற்காலிக வரிகள் தொடரும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்த வரிகள் ஜூலை மாதத்தில் காலாவதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏறக்குறைய இரண்டு மாதங்களில் காலாவதியாக உள்ள வரிகளுக்கு இந்தத் தீர்ப்பு பொருந்தினாலும், ட்ரம்பின் உலகளாவிய வரி இலட்சியங்களுக்கு இது மற்றொரு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

மேலும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பெய்ஜிங்கில் வர்த்தகப் பதற்றங்கள் குறித்து ட்ரம்ப் கலந்துரையாட உள்ள நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.

தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் ட்ரம்ப் விதித்த விரிவான உலகளாவிய வரிகளை அமெரிக்க உயர் நீதிமன்றம் ரத்து செய்த மூன்று மாதங்களுக்குப் பின்னர், பில்லியன் கணக்கான டொலர் வரித் திரும்பப்பெறுதல் தொடர்பாக மற்றொரு நீண்ட சட்டப் போராட்டத்திற்கு இந்தத் தீர்ப்பு களம் அமைத்துக் கொடுத்துள்ளது.

வர்த்தக நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு இரண்டு தீவிர இடதுசாரி நீதிபதிகளே காரணம் என ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
5 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
5 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
9 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
2
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
3
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
4
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
5
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 25 நிமிடங்கள் முன்னர்
6
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு வி
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net