← முகப்பு செய்திகள்

டெல்லியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முன்னேறுமா சென்னை? சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்ப்பு 

🕐 05 May 2026 📂 செய்திகள் 82 பார்வைகள்
டெல்லியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முன்னேறுமா சென்னை? சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்ப்பு 
சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசன் தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டி வரும் நிலையில், இன்று நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த முக்கியமான ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நடப்பு சீசனில் சென்னை அணி 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, அதே உத்வேகத்துடன் சிஎஸ்கே இன்று களம் காணுகிறது. மறுபுறம், 8 புள்ளிகளுடன் 7ஆம் இடத்தில் உள்ள டெல்லி அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 226 ரன்கள் என்ற இலக்கை எட்டிப் பிடித்த பலத்துடன் சென்னைக்கு பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது.

சென்னை அணியில் ருதுராஜ், சஞ்சு சாம்சன், சர்ஃப்ராஸ் கான் போன்ற சிறந்த பேட்டர்களும், நூர் அஹ்மத், ஸ்பென்சர் ஜான்சன் போன்ற பந்துவீச்சாளர்களும் பலம் சேர்க்கின்றனர். டெல்லி அணியில் கேஎல் ராகுல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர் உள்ளிட்ட பேட்டிங் பட்டாளமும், நடராஜன், குல்தீப் யாதவ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் அடங்கிய பந்துவீச்சு கூட்டணியும் சிஎஸ்கே-விற்கு சவால் அளிக்கக் காத்திருக்கின்றனர்.

ஐபிஎல் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை மோதியுள்ளதில், சென்னை 20 முறையும் டெல்லி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 8 போட்டிகளில் சென்னை 6-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த மைதானம் பொதுவாக பேட்டர்களுக்கு சாதகமாக இருந்தாலும், ஆட்டம் செல்லச் செல்ல சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
2 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
5 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
5 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
6 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
6 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
6 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Rare Planetary Transit On 11 June 2026 After 100 Years: ஜூன் 11
இன்றைய ராசிபலன் · 11 நிமிடங்கள் முன்னர்
2
உலக அரங்கில் எப்போதுமே கணிக்க முடியாத அதிரடி அரசியல் ஆட்டங்களை ஆட
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
3
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சம
தமிழ் · 2 மணி நேரம் முன்னர்
4
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்
தமிழ் · 2 மணி நேரம் முன்னர்
5
காஸா மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக
தமிழ் · 2 மணி நேரம் முன்னர்
6
KS Bharat has officially retired from international cricket at th
செய்திகள் · 2 மணி நேரம் முன்னர்
7
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்
தமிழ் · 3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net