← முகப்பு தமிழ்

(சேனையூர் நிருபர்) மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, நாட்டின் மாகாண சபைத்தேர்தல்கள் இ

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 48 பார்வைகள்

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, நாட்டின் மாகாண சபைத்தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெறாது என்று தன்னிச்சையாக அறிவித்திருப்பது மக்களின் இறையாண்மையை அப்பட்டமாக உதைத்துத் தள்ளும் ஒரு சர்வாதிகாரச் செயலாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இது குறித்து மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபை முறைமையை ஆரம்பம் முதல் எதிர்த்துவந்த மக்கள் விடுதலை முன்னணி, இவ்வாறான இழுத்தடிப்புகள் மூலம் அதனை இல்லாது செய்ய முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.

ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தலைமைக்கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கு இந்த நாட்டின் தேர்தல் குறித்து தீர்மானிப்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கேட்க விரும்புகின்றேன். மாகாணசபைத் தேர்தலை நடத்த விரும்பாத இந்த அரசாங்கம் டில்வின் சில்வா மூலம் அதனை வெளிப்படுத்தியுள்ளது.

சிறுபான்மை மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியும், இந்த அரசாங்கமும் அந்த மக்களின் மாகாண சபை அபிலாசைகளை குழி தோண்டிப் புதைக்கும் நடவடிக்கை எடுப்பது கவலையைத் தருகின்றது.

இலங்கை அரசியலமைப்பின் படி, தேர்தலை நடத்துவது மற்றும் அது தொடர்பான இறுதித்தீர்மானங்களை எடுக்கும் முழுமையான அதிகாரம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கே உரியதாகும். அதேபோல், பொது நிதியை ஒதுக்குவதும், அதனை மாற்றுவதும் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் நிதி அமைச்சருக்குரியது

இந்த சட்டபூர்வமான நடைமுறைகளில் தலையீடு செய்யும் அதிகாரம் டில்வின் சில்வாவுக்கு எப்படி வந்தது. பாராளுமன்றத்தையோ, தேர்தல் ஆணைக்குழுவையோ மதிக்காமல், மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகமான பெலவத்தையில் எடுக்கப்படும் முடிவுகளை நாட்டின் சட்டமாக திணிக்க முற்படுவது அப்பட்டமான ஜனநாயக மீறலாகும்.

மிக முக்கியமாக, மாகாண சபை முறைமை இந்த நாட்டு சிறுபான்மை மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான ஒரு அரசியல் தீர்வாக, அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் ஊடாகக் கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். அதிகாரப் பகிர்வு மற்றும் சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளுடன் நேரடியாகத் தொடர்புடைய இந்த மாகாண சபை கட்டமைப்பை, தேர்தல் நடத்தாமல் தொடர்ந்தும் முடக்கி வைக்க முற்படுவது சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

ஆரம்பம் முதலே மாகாண சபை முறைமையை எதிர்த்துவந்த ஜே.வி.பி, இன்று அதனை அவர்களது தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு தனி நபரின் அறிக்கை மூலம் புதைக்கப் பார்க்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

சிறுபான்மையினரின் அரசியல் அபிலாசையான மாகாண சபைத்தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைப்பதும், அதனை ஒரு கட்சிச்செயலாளர் ஊடகங்களுக்கு அறிவிப்பதும் 'மாற்றத்தை' நோக்கி வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயலாகும்.

சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்போம் என்று வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இப்போது தம்மை ஏமாற்றுகிறது என்பதை மக்கள் புரிய ஆரம்பித்துள்ளார்கள் என்றார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
5 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
7 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
10 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
10 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Did Vaibhav Suryavanshi insult Virat Kohli? Harsha Bhogle Slams F
2
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
3
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
4
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை
5
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
6
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
7
இரான் போரை நிறுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் – இ
செய்திகள் · 9 நிமிடங்கள் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net