← முகப்பு தமிழ்

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 79 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டு, அவரது

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 48 பார்வைகள்

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 79 வயதுடைய

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் சீதுவை, முக்கலங்கமுவ, பியசமர பகுதியைச் சேர்ந்த 79 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

நேற்று (20) சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில், அதிகாரிகள் குறித்த வீட்டை சோதனையிட்ட போது, வீட்டின் அறையொன்றில் இருந்த பயணப்பொதிக்குள் இருந்து மூதாட்டியின் சடலம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​வீட்டின் பராமரிப்பு பணிக்காக வந்திருந்த 42 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் போதைப்பொருளுக்கு பலத்த அடிமையானவர் என தெரியவந்துள்ளதுடன், மூதாட்டியிடம் இருந்த தங்க நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கோடே இந்த கொலை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதன் பின்னரே சடலம் பயணப்பொதிக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா மற்றும் அரசாங்க சட்டவைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்து ஆரம்பகட்ட மற்றும் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
04 Jun 2026
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
9 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net