← முகப்பு தமிழ்

மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய

🕐 5 மணி நேரம் முன்னர் 📂 தமிழ் 6 பார்வைகள்

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (10) பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மாகாண எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்று அதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியதன் பின்னரே தேர்தல் தினம் தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்க முடியும்.

தற்போதுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகள் காரணமாகவே தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சட்டத்தை மாற்றி புதிய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதா? அல்லது அதில் திருத்தம் செய்து பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்துவதா? என்பது குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்றின் ஊடாக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்க முடியும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
சிறுபோகத்திற்கான உர விநியோக நிலைமையை மீளாய்வு செய்தல், பெரும்போகத்திற்கான உர இறக்குமதி மற்றும் விநியோக தயார்
10 Jun 2026
📰
தமிழ்
வயிற்றுக்குள் மறைத்து வைத்து 'ஐஸ்' போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சொகுசு பேருந்து சாரதி ஒருவர், அந்த
2 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே, காவலில்
2 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
விமான ஓட்டுநர் உரிமம் ஏதுமின்றி, 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதம விமானியாகப் பணியாற்றிய ஒருவரைக் கனடா
4 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்
5 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 பேர் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவ
5 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net