← முகப்பு தலையங்கம்

கோவையில் 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 10 பார்வைகள்
கோவையில் 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர்
சிறுமி கொலைக்கு பின்னால் தி.மு.க: அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள்

கோவையில் 10 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திடீரென பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தனது மகளின் உடலைத் தாம் சரியாகப் பார்க்கவில்லை என்றும், அதனை அவசர அவசரமாக எரித்து விட்டார்கள் என்றும் பெற்ற தாயே ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தனது கணவரே செய்ததாகவும், அவரை ஒரு கும்பல் சம்மதிக்க வைத்ததாகவும் அவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். இவ்வாறு கணவனும் மனைவியும் மாறுபட்ட கருத்துகளை ஏன் தெரிவிக்க வேண்டும் என்ற சந்தேகம் பலமாக எழுகிறது. ஆளும் கட்சி மீது பழியைப் போடவே இந்தச் சிறுமியின் தாயாரைப் பகடைக்காயாகத் தி.மு.க பாவிக்க ஆரம்பித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இது இவ்வாறு இருக்க முதல்வர் விஜய் அவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தாரோடு தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும், அந்த வேளையில் சிறுமியின் பாட்டி மட்டுமே விஜயுடன் பேசியதாகக் கூறப்படுகிறது. சிறுமியின் அம்மா பேசவில்லை; மேலும் அவர் அங்கே இருக்கவில்லை. இந்தச் சம்பவம்கூட ஏதோ தற்செயலாக நடந்த சம்பவமா? என்ற கேள்வி எழுகிறது. காரணம், திமுக ஆதரவு ஊடகங்கள் இந்தச் சம்பவத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

இது இவ்வாறு இருக்க, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மேலும் 2 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதுபோக, மின்சாரசபை ஊழியர்களை வைத்து திமுக கட்சியினர் மின்வெட்டுகளை ஏற்படுத்தி மக்களை அவதிக்கு உள்ளாக்கி வருகிறார்கள் என்பதை ஒரு தவெக அமைச்சர் ஜாடையாகக் கூறியுள்ளார். இதனால் கடும் நடவடிக்கையில் விஜய் இறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் ஆதரவோடு முதல்வராக மாறியுள்ள விஜயின் செல்வாக்கை உடைக்க, திமுக மிகவும் துல்லியமாகத் திட்டம் போட்டுத் தனது செயல்பாடுகளை ஆரம்பித்துவிட்டது என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
ஈரான் அணி தனது குழு அளவிலான (Group stage) அனைத்துப் போட்டிகளையும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப்
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசு பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும்
3 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
காசா முனையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் மிக கொடூரமான ராணுவத் தாக்குதல்களில்
5 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தமிழகத்தில் அண்மைக்காலமாக அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் ந
6 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
பிரக்ஞானந்தா நோர்வேயில் இருந்து வந்த உடனே அவரையும் அவரது அம்மாவையும் அழைத்த விஜய், தலைமைச் செயலகத்தில்
7 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
உலக கிரிக்கெட் வரலாற்றையே ஒட்டுமொத்தமாக உலுக்கிப் போடும் வகையில், வெறும் 15 வயதே நிரம்பிய வைபவ்
7 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net