← முகப்பு செய்திகள்

கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி: அமைச்சர் சேகர்பாபு மீது முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் பாய்ச்சல்

🕐 05 May 2026 📂 செய்திகள் 98 பார்வைகள்
கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி: அமைச்சர் சேகர்பாபு மீது முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் பாய்ச்சல்
சேகர்பாபு மீது பாய்ச்சல்

கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 3 முறை ஸ்டாலின் வெற்றி பெற்றார். 4 முறையாக இந்த முறையும் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் களமிறங்கினார். திருவாரூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருந்த ஸ்டாலினை, கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட அமைச்சர் சேகர்பாபுவே காரணம். நான் பார்த்து கொள்கிறேன் என அமைச்சர் சேகர்பாபு கூறியதால், தொகுதி மாறும் திட்டத்தை ஸ்டாலின் கைவிட்டார். இந்த நிலையில் கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வியை சந்தித்து இருப்பது திமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் தனது எக்ஸ் பக்கத்தில்:

எனக்கு இரவு முழுவதும் உறக்கமில்லை இந்த முகமே என் கண்களை மூடினாலும் வந்துகொண்டே இருக்கிறது. அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்! யாருக்கும் தீங்கு நினைக்காத தலைவர்! குழந்தை உள்ளம் கொண்ட தலைவர்! தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக. ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான்.

தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்? நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா @PKSekarbabu ? என கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
5 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
5 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
5 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Rare Planetary Transit On 11 June 2026 After 100 Years: ஜூன் 11
2
உலக அரங்கில் எப்போதுமே கணிக்க முடியாத அதிரடி அரசியல் ஆட்டங்களை ஆட
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
3
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சம
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
4
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
5
காஸா மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
6
KS Bharat has officially retired from international cricket at th
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்
தமிழ் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net