← முகப்பு செய்திகள்

கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் தோல்வி! அறிவாலயம் அதிர்ச்சி 

🕐 04 May 2026 📂 செய்திகள் 118 பார்வைகள்
கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் தோல்வி! அறிவாலயம் அதிர்ச்சி 
ஸ்டாலின் தோல்வி

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்துள்ளார். காலை முதலே பின்னடைவைச் சந்தித்து வந்த அவர், 22-வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அதிகாரப்பூர்வமாகத் தோல்வியைத் தழுவினார். இந்தத் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ். பாபு, 9,122 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வரலாற்றுப் பின்னடைவு

கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலின், தேர்தல் வரலாற்றில் இரண்டாவது முறையாகத் தோல்வியைச் சந்தித்துள்ளார். இதற்கு முன்னதாக, கடந்த 1991-ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் அவர் தோல்வியைத் தழுவியிருந்தார். வாக்கு எண்ணிக்கையின் 16-வது சுற்றிலிருந்தே பின்னடைவு அதிகரித்து வந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் தவெக வேட்பாளரின் வெற்றியை முறியடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net