திடீரென ஏற்பட்ட மின்கசிவு – பெண்ணொருவர் பலி
குருநாகல், பலுகொல்ல – கொடவேஹெர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தண்ணீர் மோட்டருக்கு மின்சாரம் வழங்கும் மின்சார வயரில் திடீரென ஏற்பட்ட கசிவே இந்த அனர்த்தத்துக்குக் காரணமாகியுள்ளது.
மேற்படி பெண் மோட்டாரைப் பயன்படுத்த முயன்றபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே நேற்று உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்த கொட்டவெஹெர பொலிஸார், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கொட்டவெஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.