காலி துப்பாக்கிச்சூடு – இருவர் கைது!
காலி தங்கேதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு உதவிய இரு சந்தேகநபர்களை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
மேலும், அதே சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் காலி பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட ஒருவரிடமிருந்து 12 கிராம் 260 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.