← முகப்பு செய்திகள்

கபில சந்திரசேன மரணம் – விசேட மருத்துவக் குழு முன்னிலையில் மரணப் பரிசோதனை

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 24 பார்வைகள்
கபில சந்திரசேன மரணம் – விசேட மருத்துவக் குழு முன்னிலையில் மரணப் பரிசோதனை

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் சந்தேகத்திற்கிடமாக இருப்பதால் ஐந்து பேர் கொண்ட விசேட சட்ட மருத்துவ அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் மரணப் பரிசோதனையை முன்னெடுக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, இன்று (09) முற்பகல் மரணப் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து, மரணப் பரிசோதனைக்கான சாட்சிகளை எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், அன்னாரது உடலத்தை அவரது மனைவியின் மூத்த சகோதரியிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net