← முகப்பு செய்திகள்

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நெதன்யாகுவை சந்தித்தார்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 14 பார்வைகள்
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நெதன்யாகுவை சந்தித்தார்
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நெதன்யாகு ரகசிய பயணம்?

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை நெதன்யாகுவை சந்தித்தார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப் 28-ம் தேதி போர் தொடுத்தன. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

அதன்பின் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்கா – ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே அமைதி பேச்சுவார்த்தையில் இரு நாடுகள் இடையே இழுபறி நீடித்து வருகிறது.

இந்தநிலையில், ஈரானுடனான போரின் போது, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருடன் ரகசிய சந்திப்பை நடத்தினார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. ‘சிங்கத்தின் கர்ஜனை’ நடவடிக்கையின் போது, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரகசிய பயணம் மேற்கொண்டார். அங்கு அவர், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தார் என்று அவரது அலுவலகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது. ஈரானுடனான போரின்போது, இஸ்ரேல் தனது அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அவற்றை இயக்குவதற்கான பணியாளர்களையும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அனுப்பியதாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீ அறிவித்த ஒரு நாள் கழித்து, இந்த அறிவிப்பு வெளியானது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரகசியம் பயணம் மேற்கொண்டதாக தகவல் வெளியானநிலையில், இதற்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. நெதன்யாகு எங்கள் நாட்டிற்கு வரவில்லை என ஐக்கிய அரபு அமீரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்
செய்திகள்
Suryakumar Yadav axing from captaincy is tough decision taken for Team Future
06 Jun 2026
செய்திகள்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் ஒன்றியம், நகரம் என
06 Jun 2026
செய்திகள்
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். இதே போல பாஜக நிர்வாகிகளும் அக்கட்சியிலிருந்த
25 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test Day 1: Shubman Gill and KL Rahul smash
51 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: KL Rahul sparks internet debates after using calm
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
திமுகவின் பொதுச் செயலாளராக உள்ள துரைமுருகன், தனது பதவியை துறக்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net