← முகப்பு செய்திகள்

“எல்லாருக்கும் சமமான சந்தை வேண்டும்; இல்லையென்றால், மிகப்பெரிய இழப்பைச் சந்தியுங்கள்” – ஈரான்

🕐 04 May 2026 📂 செய்திகள் 92 பார்வைகள்
“எல்லாருக்கும் சமமான சந்தை வேண்டும்; இல்லையென்றால், மிகப்பெரிய இழப்பைச் சந்தியுங்கள்” – ஈரான்

ஈரான் போர் எதற்கு தொடங்கியது என்று மறந்து, இப்போது ‘ஹார்முஸ் ஜலசந்தி’யை மையமாக வைத்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தப் போர் தொடங்கியதில் இருந்து மூடப்பட்டிருந்த ஹார்முஸ் ஜலசந்தி, இப்போது திறப்பு… மூடல்… எச்சரிக்கை… ரிப்பீட்டு என்று சென்று கொண்டிருக்கிறது.

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் புதிய நிபந்தனை ஒன்றை முன்வைத்துள்ளது.

அது என்ன?

ஈரானின் துணை அதிபர் ஆரிஃப், “ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு என்பது இலவசம் அல்ல. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். அதனால், மற்ற நாட்டவர்களின் கப்பல்களுக்கு எங்களின் பாதுகாப்பு இலவசமாகக் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது.

ஆரிஃப் பதிவு

Iran: பேச்சுவார்த்தையில் சிக்கல்? அமெரிக்கா ரெடி; ஈரான் மறுப்பு: பாகிஸ்தானின் குறி தப்புமா?

ஒன்று, அனைவருக்கும் சுதந்திரமான எண்ணெய் சந்தை இருக்க வேண்டும்… அல்லது அனைவரும் மிகப்பெரிய இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.

உலகளாவிய எரிபொருள் விலையின் நிலைத்தன்மை என்பது, ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தங்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட… மற்றும் நிரந்தரமான முற்றுப்புள்ளி வைப்பதிலேயே தங்கியுள்ளது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

‘பெற்றோர்’ அத்தியாயத்தை கடனாளியாக இல்லாமல் மகிழ்ச்சியாகத் தொடங்க ‘பிளான்’! | பணம் வளர்ப்போம்

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
04 Jun 2026
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net