← முகப்பு செய்திகள்

எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 250!

🕐 04 May 2026 📂 செய்திகள் 92 பார்வைகள்
எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 250!

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, மேலுமொரு ஒரு கைக்குழந்தையினுடையது உட்பட நான்கு எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இன்று திங்கட்கிழமை அடையாளம் காணப்பட்ட இந்த நான்கு எலும்புக்கூடுகளும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து, புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய அகழ்வு பணிகளின் முடிவில், புதைகுழியிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வமாக அகழ்ந்தெடுக்கப்பட்ட மொத்த எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 247 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே செம்மணி புதைகுழியின் காலப்பகுதி தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நீடிக்கின்றது.

புடையினரால் யாழ்.குடாநாடு கைப்பற்றப்பட்ட 1996ம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியென சில தகவல்கள் கூறிவருகின்ற போதும் முள்ளிவாய்க்காலில் சரணடைந்தவர்களதுடையதென சில தரப்புக்கள் கூறிவருகின்றன.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
04 Jun 2026
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
25 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
41 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
51 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
57 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net