← முகப்பு செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு: சிற்றுணவக உணவுகளின் விலையில் மாற்றமில்லை – அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம்

🕐 05 May 2026 📂 செய்திகள் 30 பார்வைகள்
எரிபொருள் விலை உயர்வு: சிற்றுணவக உணவுகளின் விலையில் மாற்றமில்லை – அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம்

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை (3) மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், சிற்றுணவக உணவுகளின் விலைகளில் மாற்றமில்லை என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திங்கட்கிழமை (4) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதைய எரிபொருள் விலை அதிகரிப்பு 12 முதல் 15 ரூபாய் வரையான சிறிய தொகையாகவே உள்ளதால், அதனை ஒரு பாரிய செலவீனமாகக் கருதி பொதுமக்கள் மீது சுமையை ஏற்ற முடியாது. கடந்த முறை உணவு விலைகள் அதிகரிக்கப்பட்ட போது 42 ரூபாயாக இருந்த முட்டையின் விலை தற்போது 26 ரூபாயாகவும், 1450 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1250 முதல் 1350 ரூபாயாகவும் குறைந்துள்ளது. இவ்வாறான மூலப்பொருட்களின் விலையில் சரிவுகள், எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்படும் சிறிய செலவீனத்தை ஈடுகட்ட போதுமானவை.

இருப்பினும், எதிர்காலத்தில் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட்டால் மாத்திரம் உணவு விலைகள் குறித்து மீண்டும் ஆலோசிக்கப்படும். முன்னதாக, கடந்த மார்ச் 31 முதல் மின்சாரக் கட்டண அதிகரிப்பை முன்னிட்டு பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாவாலும், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகள் 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், தேவையற்ற முறையில் உணவு விலைகளை உயர்த்தும் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
KS Bharat has officially retired from international cricket at the age of
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக காங்கிரஸ்
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில்
4 மணி நேரம் முன்னர்
செய்திகள்
வடகொரிய அதிபரின் மகளான இளவரசி ஜூஏ, அந்நாட்டு Gen-Z இளைஞர்கள் மத்தியில் ஸ்டைல் ஐகானாக மாறியுள்ளார்.
5 மணி நேரம் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: Why Rishabh Pant Lost Test Vice-Captaincy? Assistant coach
5 மணி நேரம் முன்னர்
செய்திகள்
மின்வாரிய அலுவலகத்தில் Hard Disk-கள் திருட்டு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கொண்டு வர
5 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
Rare Planetary Transit On 11 June 2026 After 100 Years: ஜூன் 11
2
உலக அரங்கில் எப்போதுமே கணிக்க முடியாத அதிரடி அரசியல் ஆட்டங்களை ஆட
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
3
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சம
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
4
இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
5
காஸா மீது நேற்று நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக
தமிழ் · 1 மணி நேரம் முன்னர்
6
KS Bharat has officially retired from international cricket at th
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்
தமிழ் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net