← முகப்பு தமிழ்

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேறுபவர்கள் நேபாளப் பகுதி

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 38 பார்வைகள்

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேறுபவர்கள் நேபாளப் பகுதி வழியாக ஏறி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பகுதிக்கு இடையில் அமைந்துள்ள 8,849 மீற்றர் (29,032 அடி) உயரமுடைய எவரெஸ்ட் சிகரத்துக்கு இரு பக்கங்களிலிருந்தும் ஏற முடியும்.

எனினும், இந்தத் தடவை சீன அதிகாரிகள் மலை ஏறுவதற்கான அனுமதியை வழங்காததன் காரணமாக, திபெத் பகுதி வழியாக மலையேறுபவர்கள் எவரும் செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நேபாளப் பகுதி வழியாக ஒரே நாளில் அதிகளவிலானோர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த சாதனை 2019ஆம் ஆண்டு மே 22 அன்று பதிவாகியிருந்தது.

அன்று ஒரே நாளில் 223 பேர் சிகரத்தை அடைந்தமையே முன்னைய சாதனையாக இருந்தது என்று நேபாள பயண இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரிஷி பண்டாரி தெரிவித்துள்ளார்.

தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டு, ஒரே நாளில் 274 பேர் சிகரத்தை எட்டி வரலாற்று சாதனைப் பதிவை ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net