← முகப்பு தலையங்கம்

ஈரான் விலகும் சூழ்நிலை உருவானால், அதற்குப் பதிலாக வேறு ஒரு நாடு சேர்க்கப்பட வேண்டும். ஆனால்,

🕐 04 Mar 2026 📂 தலையங்கம் 14 பார்வைகள்
ஈரான் விலகும் சூழ்நிலை உருவானால், அதற்குப் பதிலாக வேறு ஒரு நாடு சேர்க்கப்பட வேண்டும். ஆனால்,

ஈரான் விலகும் சூழ்நிலை உருவானால், அதற்குப் பதிலாக வேறு ஒரு நாடு சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இதுகுறித்து அனைத்துலகக் கால்பந்துச் சம்மேளனம் (FIFA) எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின் பின்னணியில், ஈரான் அணியை அமெரிக்காவிற்கு அனுப்புவது குறித்து அந்நாட்டு நிர்வாகம் தெளிவான முடிவுக்கு வராத நிலையில் உள்ளது.

ஈரானின் கால்பந்துச் சம்மேளனத் தலைவர் மெஹ்டி தாஜ் (Mehdi Taj), உலகக் கிண்ணத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு குறைவாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். போட்டியைப் புறக்கணிக்கும் விடயம் குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும் ஆனால், இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய மண்டலத்தில் நடைபெற்ற தகுதிச்சுற்றில் ஈரான் அணி முதலிடத்தைப் பெற்று உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெற்றது. போட்டியில் கலந்துகொண்டால் முதற்கட்டத்தில் பெல்ஜியம், எகிப்து மற்றும் நியூஸிலந்து அணிகளுடன் மோத வேண்டியுள்ளது.

ஈரான் விலகும் சூழ்நிலை உருவானால், அதற்குப் பதிலாக வேறு ஒரு நாடு சேர்க்கப்பட வேண்டும். ஆனால், இதுகுறித்து அனைத்துலகக் கால்பந்துச் சம்மேளனம் (FIFA) எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இதுவரை உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் தகுதி பெற்ற பிறகு ஒரு நாடு விலகியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு பதிலாக ஈராக் அல்லது ஐக்கிய அரபுச் சிற்றரசு அணிகள் சேர்க்கப்படலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன. இதற்கு முன் 2006 நவம்பரில், அரசாங்க தலையீடு குறித்த பிரச்சினையால் FIFA ஈரானுக்கு அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதித்திருந்தது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அந்தத் தடை நீக்கப்பட்டது.

மேலும், பெண்கள் பொதுவான விளையாட்டரங்கங்களில் போட்டிகளை காணத் தடை விதித்தமை உள்ளிட்ட காரணங்களால், ஈரானுக்கு மீண்டும் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சில நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு குறித்த நிலைமை இன்னும் குழப்பமாகவே உள்ளது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026
04 Jun 2026
தலையங்கம்
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
04 Jun 2026
தலையங்கம்
செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு விண்கலம் திடீரென ஆஃப் ஆகியுள்ளது. அதில்
38 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோஸ்டா பிளாங்கா (Costa Blanca) சுற்றுலாத
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளும் நடுவானில்
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்று கொண்டிருந்த ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் (Fronti
2 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
2
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
3
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
4
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 38 நிமிடங்கள் முன்னர்
5
செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு வி
தலையங்கம் · 38 நிமிடங்கள் முன்னர்
6
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்ப
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
7
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net