← முகப்பு தலையங்கம்

ஈரான் தொடர்பான பெருமளவு தகவல்களை ஆய்வு செய்ய இஸ்ரேல் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தியதாகவும், அதற்கென

🕐 04 Mar 2026 📂 தலையங்கம் 76 பார்வைகள்
ஈரான் தொடர்பான பெருமளவு தகவல்களை ஆய்வு செய்ய இஸ்ரேல் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தியதாகவும், அதற்கென

ஈரான் தொடர்பான பெருமளவு தகவல்களை ஆய்வு செய்ய இஸ்ரேல் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தியதாகவும், அதற்கென தனிப்பிரிவு செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) இருந்த இடத்தை இஸ்ரேல் எவ்வாறு கண்டறிந்தது என்ற கேள்விக்கு தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெஹ்ரானில் (Tehran) உள்ள அரசாங்க கண்காணிப்பு வலையமைப்பின் ஒரு பகுதியாக செயல்படும் போக்குவரத்து கேமராக்களை இஸ்ரேல் ஊடுருவியதாக கூறப்படுகிறது. ஆட்சிக்கு எதிரானவர்களை கண்காணிக்க பயன்படுத்தப்படும் இந்த கேமரா அமைப்பை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் (Mossad) பல ஆண்டுகளுக்கு முன்பே ஹேக் செய்திருக்கலாம் என சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கமேனியின் பாதுகாப்புக் குழுவினர் வாகனங்களை எங்கு நிறுத்துகிறார்கள் என்பதை பதிவு செய்த ஒரு குறிப்பிட்ட கேமரா வழியாக, பாதுகாப்பு பணியாளர்களின் முகவரி, பணிநேரம் மற்றும் பாதுகாப்பு பொறுப்புகள் போன்ற விவரங்கள் திரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 28 பிப்ரவரி சனிக்கிழமை தெஹ்ரான் நகரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் கமேனி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படும் தெஹ்ரானின் பாஸ்ச்சுர் (Pasteur Street) பகுதியில் அன்றைய தினம் தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு அணியினருடன் தொடர்பு கொள்ள முடியாத சூழல் உருவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் தொடர்பான பெருமளவு தகவல்களை ஆய்வு செய்ய இஸ்ரேல் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தியதாகவும், அதற்கென தனிப்பிரிவு செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், உளவு தகவல் வழங்கிய உள்ளக ஆதாரமும் இருந்திருக்கலாம் என்றாலும், அதுகுறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதனிடையே, Central Intelligence Agency (CIA) கமேனியின் நடமாட்டத்தை நெருக்கமாக கண்காணித்து வந்ததாகவும், சம்பவம் நடந்த காலை அவர் வீட்டிலேயே இருப்பார் என்ற தகவலை அறிந்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சில மூத்த ஈரானியத் தலைவர்களும் அங்கு கூடுவதாக இருந்ததாக உளவுத்தகவல் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை அமெரிக்க உளவு அமைப்பு இஸ்ரேலுக்கு பகிர்ந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தாக்குதல் தொடங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்விவரங்கள் அனைத்தும் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில், இத்தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
தலையங்கம்
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு (ஜூன் 11, 2026
04 Jun 2026
தலையங்கம்
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
04 Jun 2026
தலையங்கம்
செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு விண்கலம் திடீரென ஆஃப் ஆகியுள்ளது. அதில்
39 நிமிடங்கள் முன்னர்
தலையங்கம்
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோஸ்டா பிளாங்கா (Costa Blanca) சுற்றுலாத
1 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளும் நடுவானில்
2 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோ நாட்டில் இருந்து சிகாகோ நோக்கிச் சென்று கொண்டிருந்த ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் (Fronti
2 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
2
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
3
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
4
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 38 நிமிடங்கள் முன்னர்
5
செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு வி
தலையங்கம் · 39 நிமிடங்கள் முன்னர்
6
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புகழ்ப
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
7
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நில
தலையங்கம் · 2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net