இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் உடன் இணைந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு வர்த்தகம் 2030ஆம் ஆண்டளவில் 1 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, அனைத்துத் துறைகளிலும் இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த வியட்நாம் விருப்பம் கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி டோ லாம் குறிப்பிட்டுள்ளார்.