← முகப்பு தமிழ்

இணைய வழி நிதி மோசடியில் ஈடுபட்ட 30 வெளிநாட்டவர்கள் கைது

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 24 பார்வைகள்

இணையம் ஊடாக சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 30 வெளிநாட்டவர்களை இன்று (07) கைதுசெய்துள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரலஸ்கமுவ, 10ஆம் மைல்கல் பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமொன்றில் தங்கியிருந்தபோதே, கல்கிஸ்ஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

குறித்த நபர்களிடமிருந்து 10 கணினிகள், 29 ஆப்பிள் வகை தொலைபேசிகள் மற்றும் இணைய வசதிகளைப் பெறுவதற்கான உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இதேபோன்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் 152 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள இந்த 30 பேரும் உள்ளடங்கியிருந்தனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிசர இடைத்தங்கல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதே, அங்கிருந்து தப்பிச் சென்று மீண்டும் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்ட நிலையில் இவர்கள் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
5 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
5 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஹொரணை, படகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களில்
6 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரத
8 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் கலேவெல, கநாதன பகுதியில் இன்று புதன்கிழமை (03) பிற்பகல்
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல் தலைவருமான தக்ஷின் ஷினவத்ராவுக்கு
9 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புதன் பகவான் நுழைந்துள்ளார்.
2
காலியில் திருட்டு சந்தேக நபரான 16 வயது சிறுவனைக் கொடூரமாகத் தாக்க
3
ஹொரண, அங்குருவத்தோட்டையில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்றிரவு ஏற்
4
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 04 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
5
ஆயுளை அதிகரிக்க எவ்வளவு நேரம் எடைப்பயிற்சி செய்ய வேண்டும் –
செய்திகள் · 25 நிமிடங்கள் முன்னர்
6
சீன வரலாற்றை மாற்றிய மா சேதுங்கின் கலாசார புரட்சி – 60 ஆண்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
செவ்வாய் கிரகத்திற்கு அருகே நின்றிருந்த நாசாவின் அதிநவீன ஆய்வு வி
தலையங்கம் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net