← முகப்பு தமிழ்

(இணையத்தள செய்தி பிரிவு) 21வது ஆசிய ஊடக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 தமிழ் 28 பார்வைகள்

21வது ஆசிய ஊடக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாளை செவ்வாய்க்கிழமை (12) மாலைதீவுக்குப் புறப்படவுள்ளார்.

மாலைதீவில் உள்ள வில்லா நௌட்டிக்காவில் இன்று திங்கட்கிழமை (11) ஆரம்பமாகும் 21வது ஆசிய ஊடக மாநாட்டு 14ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ செவ்வாய்க்கிழமை (12) இலங்கையில் இருந்து புறப்படவுள்ளார். இலங்கை செய்திகள்

இதில் பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், ஊடக உரிமையாளர்கள், ஊடக வல்லுநர்கள், தகவல் தொடர்பு ஆராய்ச்சியாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைதீவு அரசாங்கப் பிரதிநிதிகள் மட்டுமின்றி, வங்கதேசத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர், பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச்செயலாளர், சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர், திமோர்-லெஸ்டேயின் சமூகத் தொடர்புக்கான அரச செயலாளர் மற்றும் ஆசியப் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த பல துறைத் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த மாநாட்டின் நான்காவது அமர்வில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ , ஊடகக் கொள்கை, ஊடகத் தொழில்சார் மற்றும் பொது நலனுக்கான தகவல் தொடர்புப் பொறுப்புகள் ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
ஈரான் போரிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுமாறு உத்தரவிடும் தீர்மானத்தை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை
04 Jun 2026
📰
தமிழ்
நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதி
04 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11
04 Jun 2026
📰
தமிழ்
குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த மூன்று
04 Jun 2026
📰
தமிழ்
இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வரும் 5 முக்கிய கடத்தல்காரர்களில் ஒருவராக 'ஷிரான் பாசிக்' (Shira
9 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
உலகெங்கிலும் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பல்வேறு அளவிலான காதுகேளாமை (கேட்டல் குறைபாடு) பிரச்சினைகளுடன்
9 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net