← முகப்பு செய்திகள்

அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் இப்போது ‘ஹபீபி’ என்ற

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 26 பார்வைகள்
அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் இப்போது ‘ஹபீபி’ என்ற
மீரா கதிரவன் இயக்கிய ‘ஹபீபி’ படத்தின் முன்னோட்டம் வெளியானது

அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் இப்போது ‘ஹபீபி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ஈஷா எம்,மாளவிகா மனோஜ், தனஸ்ரீ, சுதாகரன், அனுஸ்ரீயா ராஜன், இஸ்மத் பானுரேகா உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். நேசம் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற 28ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் திரைத்துறை சேர்ந்த பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த விழாவில் ‘ஹபீபி’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net