← முகப்பு செய்திகள்

அர்ஜுன் தாஸ் நடித்த “கான் சிட்டி” படத்தின் பாடல் பதிவேற்றம்

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
அர்ஜுன் தாஸ் நடித்த “கான் சிட்டி” படத்தின் பாடல் பதிவேற்றம்

நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு ஹீரோவாக உருவெடுத்த அர்ஜுன் தாஸ், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அறிமுக இயக்குனர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் கான் சிட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக அன்னா பென் நடித்துள்ளார். மேலும் வடிவுக்கரசி, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் முதல் பாடலான கொரியன் பேமிலி என்ற பாடல் வெளியாகி இன்ஸ்டா டிரெண்ட் ஆனாது. அதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது. அதாவது, நான் தான் சிங்க் என்ற பாடல் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net