← முகப்பு செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் இருந்து துளசி கப்பார்ட் பதவி

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 16 பார்வைகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் இருந்து துளசி கப்பார்ட் பதவி
டிரம்ப் நிர்வாகத்தின் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் இருந்து துளசி பதவி விலகல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியில் இருந்து துளசி கப்பார்ட் பதவி விலகல் செய்துள்ளார். தனது கணவருக்கு “மிகவும் அரிதான வகை எலும்புப் புற்றுநோய்” இருப்பது கண்டறியப்பட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் நடந்த ஒரு சந்திப்பின் போது, கப்பார்ட் துளசி தனது இந்த முடிவை டிரம்பிடம் தெரிவித்தார். தேசிய உளவுத்துறை இயக்குநர் அலுவலகத்தை அவர் வழிநடத்தும் கடைசி நாள் ஜூன் 30 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என் கணவர் ஆபிரகாமுக்கு சமீபத்தில் மிகவும் அரிதான எலும்பு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. என்று கப்பார்ட் தனது ராஜினாமா கடிதத்தில் எழுதியிருந்தார். டிரம்ப் அவரது ராஜினாமாவை உறுதிப்படுத்தினார். “துரதிர்ஷ்டவசமாக, துளசி கப்பார்ட் ஜூன் 30-ஆம் தேதி நிர்வாகத்தில் இருந்து விலகுகிறார். கப்பார்ட் விலகிய பிறகு, தேசிய உளவுத்துறையின் முதன்மை துணை இயக்குநர் ஆரோன் லூகாஸ், தேசிய உளவுத்துறையின் தற்காலிக இயக்குநராகப் பணியாற்றுவார்,” என்று டிரம்ப் கூறினார்.

மேலும் செய்திகள்
செய்திகள்
கார் பந்தயங்களில் தன்னால் எவ்வளவு காலம் ஈடுபட முடியுமோ, அவ்வளவு காலம் தொடர்ந்து பங்கேற்க விரும்புவதாக
08 Jun 2026
செய்திகள்
Vaibhav Suryavanshi should not be overburdened, says Soruav Ganguly after his India
08 Jun 2026
செய்திகள்
Former spinner Harbhajan Singh slams the national selection committee for excluding Rajat
08 Jun 2026
செய்திகள்
திரையரங்குகளில் வெளியாகிப் பெரும் வசூல் சாதனை படைத்த நடிகர் சூர்யாவின் 'கருப்பு' திரைப்படத்தின் ஓடிட
08 Jun 2026
செய்திகள்
இந்தியாவின் மிகப்பெரிய இன்ஷூரன்ஸ் நிறுவனமான எல் ஐ சி நிறுவனத்தின் பணம் ஆபத்தில் இருப்பதாக வெளியாகி
08 Jun 2026
செய்திகள்
தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் நாற்காலி மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அதி நவீன
08 Jun 2026
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net