← முகப்பு செய்திகள்

அமெரிக்கா-ஈரான் மோதல் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 30 பார்வைகள்
அமெரிக்கா-ஈரான் மோதல் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக
அமெரிக்க அதிபர் டிரம்ப் – சீன அதிபர் ஜின் பிங் சந்திப்பு

அமெரிக்கா-ஈரான் மோதல் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துக்கான கடல்வழி பாதையான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பு சிக்கல்களை சந்தித்ததால் கச்சா எண்ணெய் விலை உலகளவில் அதிகரித்து, எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம், உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற விளைவுகள் உருவாகின. இதன் தாக்கம் ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதித்து உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்கியது. ஈரானுக்கு முக்கிய பொருளாதார ஆதரவாளராக சீனா செயல்பட்டு வருகிறது. சீனா, ஈரானின் எண்ணெயை தொடர்ந்து வாங்கி வருவதுடன், அமெரிக்க தடைகளை சமாளிக்க வர்த்தக மற்றும் நிதி ஆதரவுகளையும் வழங்கி வருகிறது. அதே நேரத்தில் நேரடி ராணுவ தலையீட்டை தவிர்த்து, தூதரக மற்றும் பொருளாதார ஆதரவு மூலம் ஈரானை ஆதரிக்கும் நிலைப்பாட்டை சீனா கடைப்பிடிக்கிறது. இத்தகைய சூழல்களுக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 3 நாள் பயணமாக நேற்று சீனா சென்றார். அமெரிக்கா ஜனாதிபதி ஒருவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும். இந்தநிலையில், பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜின் பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ஈரானுடனான பதற்றத்தை தணிக்கவும் தூதரக ரீதியிலான உடன்பாடு ஏற்படவும் சீனா உதவ வேண்டும். நாம் இணைந்து ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க போகிறோம் என்றார் டிரம்ப். சர்வதேச சூழல் நிலையற்றதாக காணப்படுகிறது. உலகம் ஒரு புதிய திருப்புமுனையை எட்டியுள்ளது. நம் இரு நாட்டு மக்களின் நலனுக்காக ஒரு நல்ல எதிர்காலத்தை நாம் கட்டமைக்க வேண்டும். அமெரிக்கா – சீனா ஆகிய நாடுகள் போட்டியாளர்களாக இல்லாமல் நட்பு நாடாக இருக்க வேண்டும். என்றார் சீன அதிபர் ஜின் பிங்.

மேலும் செய்திகள்
செய்திகள்
Suryakumar Yadav axing from captaincy is tough decision taken for Team Future
06 Jun 2026
செய்திகள்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுகவின் ஒன்றியம், நகரம் என
06 Jun 2026
செய்திகள்
அதிமுக நிர்வாகிகள் பலர் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள். இதே போல பாஜக நிர்வாகிகளும் அக்கட்சியிலிருந்த
25 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test Day 1: Shubman Gill and KL Rahul smash
51 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
IND vs AFG Test: KL Rahul sparks internet debates after using calm
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
திமுகவின் பொதுச் செயலாளராக உள்ள துரைமுருகன், தனது பதவியை துறக்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net